மெட்ராஸ் ஐ பிரச்சனையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?..!! - Seithipunal
Seithipunal


பொதுவாக மழை மற்றும் வெயில் காலத்தில் கண்களை அதிக அளவு பாதிக்கக்கூடிய "மெட்ராஸ் ஐ" எனப்படும் நோயானது அதிகளவு பரவுவது நாம் அறிந்த ஒன்றே. மார்ச்., ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் மெட்ராஸ் ஐயின் தாக்கம் தீவிரமாக இருக்கும். 

இந்த நிலையில்., தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளது. இதனால் சென்னை பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. சென்னையில் இருக்கும் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சுமார்  20 க்கும் மேற்பட்டோர்., மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கிறது. 

madras eye, madras eye prevention, madras eye solution,

மெட்ராஸ் ஐ எனப்படும் இந்த நோய்., அடினோ வைரஸ் கிருமியால் கண்களைத் தாக்கி., அதன் மூலமாக உருவாகிறது. மேலும்., நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் இரண்டு கண்களும் சிவந்து காணப்படும்., கண்கள் உறுத்திக்கொண்டே அதிகப்படியான நீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். 

இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றும் மூலம் பரவும் என்பதால்., இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் சோப்பு., படுக்கை விரிப்பு போன்ற பொருட்களையும் உபயோகிக்க கூடாது. 

அவ்வாறு உபயோகிக்கும் பட்சத்தில்., அந்த கிருமி தொற்றானது பரவி., நாமும் மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது. 

madras eye, madras eye prevention, madras eye solution,

இளம் வயதுள்ள குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படும் பட்சத்தில்., அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் தவிர்ப்பது நல்லது. நேரடியாக குணப்படுத்த மருந்துகள் கிடையாது என்ற பட்சத்தில்., சொட்டு மருந்துகள் வாங்கி உபயோகம் செய்யவும் கூடாது. 

இதற்காக கண் மருத்துவரிடம் சென்று சரியான அறிவுரைப்படி மருந்துகளை உபயோகிக்க வேண்டும். மேலும் வெளியில் செல்லும்போது சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சூரிய கண்ணாடி வாங்கி அணிந்து கொள்ள வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to prevent madras eye infection


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->