தோசை, சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய குருமா... 10 நிமிடத்தில் செய்வது எப்படி?..! - Seithipunal
Seithipunal


வீடுகளில் தயார் செய்யப்படும் உணவுகளில் சிலவற்றை அவசர அவசரமாக தயார் செய்வோம். அந்த வகையில், காலை நேரங்களில் அல்லது மாலை நேரங்களில் தோசை மற்றும் சப்பாத்திக்கு ஏற்றவாறு இருக்கும் சுவையான வெங்காய குருமா செய்வது எப்படி என இனி காணலாம். 

வெங்காய குருமா செய்ய தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 4,
தக்காளி - 3,
பச்சை மிளகாய் - 2,
கடலை பருப்பு - 1 கரண்டி,
கடலை மாவு - 1 கரண்டி,
கடுகு - சிறிதளவு,
சோம்பு தூள் - 1 கரண்டி,


மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் - சிறிதளவு,
மல்லித்தூள் - கால் கரண்டி,    
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

வெங்காய குருமா செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் வானெலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து தாளிக்க வேண்டும். 

இதன்பின்னர், கடலைப்பருப்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியை குழைய வதக்க வேண்டும். இதனையடுத்து மிளகாய்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். 

இந்த கலவை நன்கு கொதித்ததும், கடலை மாவை நீரில் கரைத்து ஊற்றவும். கலவை நன்றாக கொதித்ததும் இறக்கும் தருவாயில், கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Prepare Vengaya Kuruma Tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->