உடலுக்கு நன்மையை அளிக்கும் கவுனி அரிசி புட்டு செய்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள அவசர காலகட்டத்தில் வாழ்ந்து வரும் நாம் நமது உடலுக்கு தேவையான சத்தான பொருட்களை சாப்பிடுவது அவசியம். அவ்வாறு உடலுக்கு சத்தான பொருட்களை சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில்., நமது உடலில் இருக்கும் சத்துக்கள் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இல்லத்தில் இருக்கும் சமயத்தில் உடலுக்கு சத்தான கவுனி அரிசி புட்டை சமைத்து நமது உடல் நலத்தை பாதுகாக்கலாம். 

கவுனி அரிசி புட்டு செய்யத் தேவையான பொருட்கள்: 

கவுனி அரிசி மாவு - ஒரு குவளை.,   
பச்சை மிளகாய் - 2 எண்ணம் (Nos)., 
வெங்காயம் மற்றும் கேரட் - ஒன்று., 
எலுமிச்சம் பழம் - அரைப்பழம்., 
கறிவேப்பிலை மற்றும் இஞ்சி - சிறிதளவு., 
கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு - கால் தே.கரண்டி., 
வேர்க்கடலை மற்றும் தேங்காய் துருவல் - 2 தே.கரண்டி., 
எண்ணெய், உப்பு - தே.அளவு...

கவுனி அரிசி புட்டு செய்முறை: 

எடுத்துக்கொண்ட கவுனி மாவை தண்ணீரில் சேர்த்து நன்றாக பிசைந்து சுமார் 15 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பின்னர் இஞ்சி., பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.  

கேரட்டை நன்றாக துருவி எடுத்து கொண்ட பின்னர்., முதலிலேயே நீரில் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் வானெலியில் எண்ணெய்யை ஊற்றி கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு., கடலை பருப்பு மற்றும் வேர்கடலையை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். 

இதற்கு பின்னர் இஞ்சி., பச்சை மிளகாய்., கறிவேப்பில்லை., வெங்காயம் மற்றும் கேரட்., உப்பை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். இந்த கலவை நன்றாக வதங்கிய பின்னர் வேக வைத்து எடுத்து கொண்ட புட்டை சேர்த்து கிளறி., சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் எலுமிச்சை சாற்றை பிழிந்து இறக்கினால் சுவையான மற்றும் உடலுக்கு சத்தான கவுனி அரிசி புட்டு தயார்.

English Summary

how to make cavuni rice puttu in home


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal