எளிய முறையில் அழகு பெற., உங்களுக்கான அழகு குறிப்புக்கள்.! ஆண்களுக்கும்., பெண்களுக்கும்.!!  - Seithipunal
Seithipunal


நாம் என்னதான் செய்தாலும் நமது உடலுக்கும் அழகுக்கும் பொலிவு சேர்க்கும் வகையிலும்., பாதுகாப்பு சேர்க்கும் வகையிலும் சில வகையில் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதும்., அதன் மூலமாக நமது உடல் நலத்தை மேம்படுத்தி வருவது வழக்கம். அந்த வகையில் சில அழகு குறிப்புகளை காண்போம். 

ஆமணக்கு எண்ணையை புருவத்தில் தடவி கொடுத்து வந்தால் புருவத்தில் இருக்கும் முடியானது அதிகளவில் வளரும். தினமும் முளைகட்டிய தனியா வகையான கொண்டைக்கடலை பயறை சாப்பிட்டு வந்தால் தலை முடியானது நன்றாக வளரும். 

செம்பட்டையான முடி இருக்கும் நபர்கள் தேங்காய் பாலை தடவி குளித்து வந்தால் செம்பட்டை முடி பிரச்சனை விரைவில் முடிவிற்கு வரும். முகப்பொலிவை அதிகரிக்க பப்பாளி பழத்தை நன்றாக பிசைந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பொலிவானது மெருகேறும். 

முகத்தில் இருக்கும் அதிகளவு பருவை மறைப்பதற்கு துளசி செடியின் இலைகளை சாறாக அரைத்து முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு பிரச்சனை முடிவிற்கு வரும். கண்களில் இருக்கும் கருவளையத்தை குறைப்பதற்கு வாழைப்பழத்தின் தோலை சூடேற்றி கண்களின் மீது வைத்தால் கருவளையம் நீங்கும். 

உதடுகள் அழகாக ஆவதற்கு உதடுகளில் அவ்வப்போது வெண்ணெயை தடவ வேண்டும். சூரிய காந்தியின் எண்ணையை கை மற்றும் கால் நகங்களில் தடவி வந்தால் நகங்களில் ஏற்படும் சிதைவு மற்றும் நகங்கள் வெண்மையாக இருக்கும். 

முகம் பொலிவு பெறுவதற்கு பாதம் பருப்பை நன்றாக அரைத்து பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவு பெரும். முகத்தில் இருக்கும் எண்ணைத்தன்மையை நீக்குவதற்கு முட்டையின் வெள்ளை கரு., தேன் மற்றும் மாதுளை சாற்றை கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மையானது நீங்கும். 

முகம் பளபளப்பாவதற்கு பாதம் பருப்பை நன்றாக அரைத்து தேனை காலத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும். சருமமானது எந்த நேரமும் உலராமல் பளபளப்புடன் இருப்பதற்கு பசும்பாலை தேய்த்து பின்னர் குளித்து வந்தால் பளபளப்புடன் இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to increase our beauty by little tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->