தூக்கம் வரலயா.? இதோ இருக்கு எளிமையான வழி.. சின்ன டிப்ஸ்.. பெரிய பலன்.! - Seithipunal
Seithipunal


சிலருக்கு படுத்து கண்ணை மூடியவுடன் நன்றாக உறக்கம் வரும். அவர்கள் வரம் பெற்றவர்கள் என்று தான் கூற வேண்டும். இரவு ஏழு மணியிலிருந்து எட்டு மணி நேரம் வரை தூங்கினால் தான் உடல் நன்றாக ஆரோக்கியமாக இருக்கும். உடலில் ஏற்படும் நிறைய பிரச்சனைகளுக்கு தூக்கமின்மை தான் காரணம்.

நாம் உறங்காமல் விழித்திருக்கும் போது நமது உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு ஓய்வு இருக்காது. எனவே தூங்கினால் தான் அவற்றிற்கு ஓய்வு கிடைக்கும். தூக்கமின்மையால் அதிக மன அழுத்தம் மற்றும் சோர்வு ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தூங்குவதில் கூட பிரச்சனையா என்றால் உலக அளவில் இது மிகப் பெரிய பிரச்சனை என்று பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டாக்டர் ஆன்ட்ரூ வீல்  தூக்கமின்மை பிரச்னைக்கு எளிதாக ஒரு தீர்வை கொடுக்கிறார். 

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மூச்சில் கவனம் செலுத்தினால் மன அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று அவர் கூறுகிறார்.

வெளி மூச்சு மற்றும் உள்மூச்சு விடும் பொழுது மூளை தனது செயல்பாடுகளை மொத்தமாக நிறுத்திவிட்டு அமைதி நிலைக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் வீல் மூக்கின் வழியாக நான்கு நிமிடங்கள் சுவாசத்தை உள் எடுக்கவும் ஏழு அல்லது எட்டு நொடிகள் மூச்சை நிறுத்தி பின்னர் அதனை வாய் வழியாக விட வேண்டும் என்று கூறுகிறார். 

இதனால் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைத்து நன்றாக உறக்கம் வரும் என்று வீல் கூறுகிறார்.
இந்தப் பழக்கத்தை அடிக்கடி செய்தால் தேவையற்ற பதற்றங்கள், மன அழுத்தம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை கட்டுக்குள் வைத்து இதயத்தை பாதுகாக்கலாம். 

இதை ஓரிரு முறை முயற்சித்தாலே இதன் பலனை நாம் அனுபவிப்பதை கண்முன்னே காணலாம். மூச்சை உள் இழுத்து சில நொடிகள் நிறுத்தி அதன் பின் வெளியிடும் பொழுது தொடர்ச்சியாக மூச்சை கவனிக்க வேண்டும். இப்படி ஐந்து அல்லது ஆறு முறை செய்தாலே தானாக உறக்கம் தழுவிக்கொள்ளும். 

ஆரம்ப கட்டத்தில் இது பெரிதாக பலன் அளிக்காததை போல தோன்றலாம். ஆனால், இதை அடிக்கடி பழகிக் கொண்டால் ஒரு நிமிடத்திற்குள் உங்களுக்கு பலன் கிடைப்பதை நீங்கள் காண முடியும். மூளைக்கு இது ஒரு பிரம்மாண்டமான பயிற்சி என்று கூறப்படுகிறது. 

மூளைக்கு மந்திரம் போட்டது போல ஸ்விட்ச் ஆப் செய்வது போல ஒரு செயலை இந்த மூச்சுப் பயிற்சி செய்து உறக்கத்தை வரவழைக்கும் என்று வீல் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Get sleep very fast at Night Tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->