மழைக்காலத்தில் மூன்று வேலையும் எப்படி சாப்பிட வேண்டும்..!!  - Seithipunal
Seithipunal


மழைக்காலத்தில் கொசுக்கடியிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும். நாம் உண்ணும் உணவின் மூலமும், குடிக்கும் தண்ணீர் மூலமும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஆறு மணி நேரத்துக்கு மேல் சமைத்து வைத்த உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

காலை : 

அதிகளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற அனைத்து வகையான காய்களை சாப்பிடுவது நல்லது. சாப்பிடக்கூடிய உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும்.

அசைவ உணவுகளான கோழி, மீன், முட்டை, இரால் மற்றும் நண்டு ஆகியவற்றை மதிய உணவாக சாப்பிடலாம். வெஜிடபிள் புலாவ், சப்பாத்தி - வெஜிடபிள் கறி, பருப்பு கறி, தக்காளி சாதம் மற்றும் அனைத்து சாத வகைகளையும் சாப்பிடலாம்.

மதிய உணவில் மோர் மற்றும் தூதுவலை ரசம் செய்து சாதத்துடன் சாப்பிடலாம். வைட்டமின் சி நிறைந்த சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை பருகலாம்.

மதியம் : 

அதிகளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது. சாப்பிடக்கூடிய உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும். அசைவ உணவுகளான மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை மதிய உணவாக சாப்பிடலாம். கோழிக்கறி சூப் வைத்தும் குடிக்கலாம்.

மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது நல்லது. மீன்களில் அதிக அளவு ஜிங்க் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும்.

மாலை நேரத்தில் மழைக்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு : 

இரவில் இட்லி, தோசை, சப்பாத்தி, கோதுமை ரவை, சேமியா ஆகியவற்றை சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது, இது சளி பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.

ஐந்து முந்திரி பருப்பை அல்லது பாதாம் பருப்பை ஊறவைத்து அதனுடன் அரைகப் தேங்காய் துருவிப்போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்தால் இயற்கை பால் தயாராகி விடும். அதன்பின் பால் அருந்துவதற்கு பதில் இயற்கை பாலை பயன்படுத்தலாம்.

குறிப்பு : 

நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மழைக்காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

சாதாரண தேநீரை விட இஞ்சி சேர்த்த மசாலா தேநீர் எடுத்துக்கொள்வது நல்லது. இது மழையினால் ஏற்படும் குளிருக்கு இது இதம் தருவதுடன், சளி பிடிக்காமல் தடுக்கவும் உதவும். மழைக்காலத்தில் நீர் சத்து நிரம்பிய பூசணி, புடலை, சுரைக்காய் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to eat during rainy days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->