சிறுநீர் பையில் ஏற்படும் தொற்றை சரி செய்வது எப்படி?.!  - Seithipunal
Seithipunal


நம் உடலில் இருக்கும் பல விதமான நச்சு பொருட்களை வெளியேற்றுவது முக்கியமான நிகழ்வாகும். அவ்வாறு நமது உடலில் நச்சு பொருட்கள் வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில்., அது உடலுக்கு தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் அதிகளவிலான நச்சுக்களானது சிறுநீரின் மூலமாக வெளியேறுகிறது. 

சிறுநீர் பாதையில் இருக்கும் தொற்றுகள் காரணமாக சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள்., அதிகளவு காய்ச்சல்., முதுகுவலி மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நாம் தடுத்து நிறுத்தாத பட்சத்தில்., நமக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்படும் பிரச்சனை உள்ளது என்பதால்., நச்சு பொருட்களை நமது உடலில் இருந்து வெளியேற்றுவது குறித்து இனி காண்போம். 

தினமும் குறைந்தது கண்டிப்பாக சுமார் 8 குவளை நீரை அருந்த வேண்டும். இதன் மூலமாக நமது உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு., நமது உடலில் தொற்று ஏற்படுவதை தடுக்கும். இதன் காரணமாக ஆல்கஹால்., கார்போனேட் குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். 

தினமும் உணவுகளை சாப்பிடும் சமயத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவு உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால்., சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் சியின் மூலமாக நமது உடலில் இருக்கும் அமிலத்தன்மை அதிகரிக்கப்பட்டு., சிறுநீர் தொற்றில் இருந்து நமது உடலானது பாதுகாக்கப்படும். 

வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை எலுமிச்சை சாற்றினை குடித்து வந்தால்., எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆண்டி - ஆக்சிடண்டுகளின் மூலமாக உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அளிக்கப்பட்டு., உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனை போன்று தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால்., உடலின் நீர்ச்சத்தானது அதிகரிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to cure problem kidney stone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->