உடலில் சூடு அதிகரித்தால் ஏற்ப்படும் விபரீதங்கள்.! இதோ இருக்கு எளிமையான தீர்வு.! - Seithipunal
Seithipunal


பொதுவாக உடல் சூடு ஏற்பட்டால் நமது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

 உடலானது, வெப்பநிலைக்கு ஏற்றது போல இருக்காமல் அதிக வெப்பத்தை கொடுத்தால் உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். 
 
இந்த காலத்தில் ஆண்ட்ராய்டு போன் உபயோகிக்காத மனிதர்களே இல்லை. அத்துடன் கணினியில் வேலை செய்வதால் அதிக சூடு ஏற்படும் நிலை இருக்கிறது.. 

அவற்றிற்கு தீர்வு தரும் வகையில் இந்த பதிவில் சில தகவல்களை காணலாம். 


உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளாக புளித்த மோர், ஊறுகாய், காப்பி, டீ, கருவாடு, வினிகர் உள்ளிட்டவை இருக்கின்றன.

எனவே, உப்பு, காரம் மற்றும் புளிப்பு அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

புகை மற்றும் மது பழக்கம் உடலில் சூட்டை அதிகரிக்கிறது. நமது உடலில் சூடு அதிகரித்தால் நீர் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.. 

உதாரணமாக வெண்பூசணி, புடலங்காய், வெள்ளரிக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். 

இளநீர் அதிகம் குடிக்க வேண்டும். பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் மணத்தக்காளி கீரை உள்ளிட்டவை உடலுக்கு மிகவும் நல்லது. 

உடல் சூட்டை தணிக்கும் ஆரஞ்சு, சாத்துக்குடி, நாத்தம்பழம் மற்றும் எலுமிச்சம்பழம் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூட்டை விரைவில் கட்டுப்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Cure Body Heat using Home remedies


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->