பெண்களுக்கு முதுகுவலி ஏற்படுவதில் இருந்து தப்பிப்பதற்கு எளிய ஆலோசனைகள்.! இதனை மட்டும் செய்தால் போதும்.!! - Seithipunal
Seithipunal


பெரும்பாலான பெண்களுக்கு முதுகுவலி மற்றும் மூட்டு வலியானது அதிகளவு ஏற்பட்டு., இதனால் பலர் அவதியடைந்து வருகின்றனர். அந்த வகையில்., குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள் பெரும்பாலும் இது போன்ற பிரச்சனையால் கடுமனையான அவதியடைந்து வருகின்றனர். 

இந்த பிரச்சனைக்காக பல விதமான தைலங்கள் மற்றும் மருந்துகள் என்று சாப்பிட்டும் தகுந்த பலனை தரவில்லை என்ற பட்சத்தில்., நமது முயற்சியிலேயே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இந்த பதிவில் முதுகு வலிக்கு உண்டான தீர்வுகள் குறித்து காண்போம். 

அதிக நேரம் இருக்கையில் அமர்ந்தபடியே பணியாற்றும் பெண்கள் முதுகுக்கு அடிப்புறத்தில் சிறிய அளவிலான தலையணையை வைத்து கொண்டு., கூன் விழாதவாறு நிமிர்ந்து அமருங்கள். நீண்ட நேரம் அமர்ந்தே இருக்காதீர்கள்., அவ்வப்போது எழுந்து நடந்து கொடுங்கள். இருக்கையில் அமர்ந்திருக்கும் சமயத்தில்., கால்களின் நிலையை சிறிது நேரத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யுங்கள். 

தேவையான உடற்பயிற்சி., நடைப்பயிற்சி., நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி செய்வது மற்றும் யோகாசனம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக முதுகு வலியானது ஏற்படாமல் தடுக்கலாம். இதனை மேற்கொள்வதன் மூலமாக முதுகுவலி ஏற்பட்டாலும் சரி செய்யலாம். 

உடலுக்கு சத்தான பசுப்பால்., கொண்டைக்கடலை., முட்டை., ஆரஞ்சு பழம்., எள்ளுருண்டை., பாதம் பருப்பு மற்றும் உளுந்து ஆகிய பொருட்களை சாப்பிடுங்கள். அதிக முதுகு வலியால் அவதியடையும் பட்சத்தில்., கால்களை மடித்து கால்களுக்கு நடுவில் தலையணையை வைத்து உறங்குங்கள். மேலும்., சீரான மெத்தையில் படுத்து உறங்குங்கள்.

ஹீல்ஸ் போன்ற உயரமான காலனிகளை அணியும் பழக்கத்தை வைத்திருந்தால் தவிர்த்து விடுங்கள். நாம் நடக்கும் சமயத்திலும்., நிற்கும் சமயத்திலும் நமது கால்கள் சமமாக இருக்க வேண்டும். ஒரு காலுக்கு அதிகளவு எடை அழுத்தம் இருக்கும் பட்சத்தில் அது பின் விளைவுகளை ஏற்படுத்தும். 

எடை அதிகமாகவுள்ள பைகளை தோளில் சுமக்க கூடாது. முடிந்தளவு பெண்களின் தலை - தோள்பட்டை - இடுப்பு ஆகிய பகுதிகள் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு கவனித்து கொள்ள வேண்டும். முடிந்தளவு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியை கற்றுக்கொண்டு உடல் நலத்தை பாதுகாப்பது நல்லது. 

English Summary

how to cure back pain for woman solution is there


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal