மாதவிடாய் வலி பின்னி எடுக்கிறதா.? இப்படி படுத்தால், வலியை மறக்கலாம்.! பெயின் கில்லரே வேண்டாம்.! - Seithipunal
Seithipunal


பல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மிகப் பெரிய கொடுமையாக இருக்கும். அந்த நேரத்தில் வேதனை வலி சேர்ந்து ஒரு வழி செய்துவிடும். 

இதை சமாளிக்க பலரும் பெயின் கில்லர் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். இப்படி தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்பட்டு தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

எனவே, மாதவிடாய் வலியை குறைக்க சில இயற்கை வழிகளை மேற்கொள்வார்கள். அது சிலருக்கு மட்டுமே உதவிகரமாக இருக்கும் எல்லோருக்கும் அதே பலன் அளிக்கக் கூடிய விஷயமாக இருக்காது. 

இந்நிலையில், தற்போது நாம் இரவில் தூங்கும் பொசிஷனை மாற்றிக் கொண்டால் அந்த வலியில் இருந்து தப்பிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை முயற்சித்துப் பாருங்கள். 

பல பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் முதுகு மற்றும் இடுப்பு போன்ற இடங்களில் பயங்கரமாக வலி இருக்கும். அப்பொழுது தலையணை போன்ற பொருட்களை இடுப்பில் வைத்து முட்டு கொடுத்துக்கொண்டு தூங்கினால் மாதவிடாய் வலியை சற்று குறைக்கலாம். இதன் மூலம் நல்ல தூக்கம் கிடைக்கும். 

மாதவிடாய் நாட்கள் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் இப்படி செய்யலாம். இடுப்பிற்கு மட்டும் இல்லாமல் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து ஒரு பக்கமாக படுக்கலாம் மல்லாந்து படுத்தால் கால்களின் அடிப்பக்கத்தில் தலையணையை கொடுக்கலாம். இதன் மூலம் கொஞ்சம் கம்பேட்டபலான உணர்வு நமக்கு கிடைக்கும். எனவே வலியை மறந்து நிம்மதியாக தூங்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Control period pain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->