குறைந்த செலவில் கும்மென்று வாழலாம்! எவ்வித நோய்களும் வாராமல் தடுக்க இந்த மூன்றும் போதும்!!  - Seithipunal
Seithipunal


ஆடாதொடை கஷாயம் :-

தேவையானவை:

ஆடாதொடை இலைகள்- 10,
சுக்கு - 10 கிராம்,
மிளகு - 10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்

செய்முறை:

ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.

பலன்கள்: தொண்டைக் கரகரப்பு, மார்புச் சளி, மூச்சிரைப்பு (wheezing ) ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

கற்பூர வள்ளி - வெற்றிலை கஷாயம்:-

தேவையானவை:

கற்பூரவள்ளி இலை- 4,
வெற்றிலை - 4 ,
தூதுவளை இலை- 2 ,
சுக்கு, மிளகு - சிறிதளவு

செய்முறை:

கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கஷாயத்துடன் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

பலன்கள்: தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நலன் பலனளிக்கும்.

கபசுர கஷாயம்:-

தேவையானவை:

சுக்கு, திப்பிலி, லவங்கம்,
சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம்,
முள்ளிவேர், கடுக்காய்த் தோல்,
ஆடாதொடை, கற்பூரவள்ளி,
கோஷ்டம், சீந்தில்கொடி,
சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு,
வட்டத்திருப்பி, முத்தக்காசு.
(இந்தப் பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

செய்முறை:

இந்தப் பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.

பலன்கள்: மழைக்காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்தக் கஷாயம் உதவும்.

கவனம்: மேற்கண்ட கஷாயங்களை 15 வயதுக்குட்பட்டவர்கள் 30 மி.லியும், பெரியவர்கள் 60 மி.லியும், காலை, மாலை இருவேளைக்கு மூன்று நாள்கள் குடிக்கலாம். சளி, காய்ச்சல் கண்டவர்கள் சுயமாக இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

healthy life tips in tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->