நரம்பு தளர்ச்சிக்கு எளிதில் தீர்வு.! மிஸ் பன்னிடாதீங்க.!  - Seithipunal
Seithipunal



நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய உதவும் உணவு வகைகள்:

பொன்னாங்கண்ணிக்கீரை நரம்புத் தளர்ச்சிக்கு நல்ல மருந்தாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரை அனைத்து இடங்களிலும் மலிவாக கிடைக்கும். ஆகையால், அதை நீங்கள் தினமும் சமைத்து சாப்பிடுவது நல்லது. 

பொன்னாங்கண்ணிக் கீரையை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய முடியும்.இது உடலிலுள்ள அனைத்து நரம்பு மண்டலத்திற்கு வலிமையை உண்டாக்கும்.

நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தை அதிகம் சாப்பிடுங்கள் மாதுளை பழம் உடல் சூட்டை தனித்து, உடலை வலுப்படுத்தும்நரம்பு  தளர்ச்சியை சரி செய்யும்.

நெல்லிக்காயில் உடலை வலுப்படுத்தும் அனைத்து சக்திகளும் உள்ளது. நெல்லிக்கனியை தினமும் சாப்பிடுவதினால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும். மேலும்  உடலுக்கு எந்த ஒரு நோய்களும் ஏற்படாது.

இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட நன்கு பசியெடுக்கும் எந்த ஒரு செரிமான பிரச்சனைகளும் ஏற்படாது உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி வெற்றிலைக்கு உண்டு.

முருங்கைகீரைக்கு பொதுவாக உடலை வலுப்படுத்தும் சக்தி அதிகம் உண்டு பலவிதமான நோய்களுக்கு கண்கண்ட மருந்து, உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும்முருங்கை கீரையை சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் நரம்புகள் வலுப்படும்.

பேரிச்சை பழத்துடன் பால் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும். நரம்புகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும், தேறாத உடல் கூட பேரிச்சையுடன்  பால் கலந்து சாப்பிடு வர தேறும். பலவீனமான உடல் கூட பலம் பெரும்.

 மஞ்சள் மற்றும் வெந்தயம்

மஞ்சளில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு குடலுக்குத் தேவையான நன்மை பொருட்கள் அடங்கியுள்ளது.இதில் ஆன்ட்டிசெப்டிக் எனும் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது அது உடலுக்கு வலிமையை உண்டாக்குகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.

வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியும். தினமும் காலையில் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும் மற்றும் உடல் சூடு குறையும் ஆகையால் உடல் பலம் பெறும்  தினமும் உணவில் மஞ்சள் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சாப்பிடுவது நல்லது . இது நரம்புத் தளர்ச்சியை போக்க உதவுகிறது.

வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி சிறிது பனங்கல் கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.

அத்தி பழத்தை ஒரு நாளைக்கு 5 பழம் வீதம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

மாதுளம் பழச்சாறு, தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் உட்கொள்ள நரம்பு தளர்ச்சி சரியாகும்.

நரம்பு தளர்ச்சி மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட நரம்பு தளர்ச்சி குணமாகும்.

சாதிக்காய்

நரம்புத்தளர்ச்சியை சரி செய்வதில்  சாதிக்காயும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜாதிக்காய் பொடியை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தளர்ச்சிக்கு நல்ல மருந்தாக. இது அமைகிறது ஜாதிக்காய் பொடியை உணவில் சேர்த்து சாப்பிடலாம் அதனால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. தினமும் காலை இரவு இருவேளையும் ஜாதிக்காய் பொடியை சேர்த்து கலக்கி குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும்.

லவங்கப்பட்டை:

தேநீரில் லவங்கப்பட்டையை போட்டு குடித்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health Tips for growing


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->