வெறும் தண்ணீர் குடிப்பதை விட சீரக தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா.?!  - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமான வாழ்வை பெறவும் நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் பல்வேறு வகையான முயற்சிகளை நாம் செய்து வருகிறோம். நம் உடல் நலத்திற்கு  பல நன்மைகளை அளிப்பதுடன்  நம்  உடலில் இருக்கக்கூடிய  நச்சுக்களையும் நீக்கக்கூடிய ஒரு சிறந்த பானம் ஜீரா தண்ணீராகும் . இந்த பானத்தை தயாரிப்பது மிகவும் எளிது. மேலும் இதில் ஏராளமான நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றன.

சீரகத்தில் இருக்கின்ற  ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள்  நம் உடலின் எடை குறைப்பிற்கு  உதவுகிறது.  மேலும் இவற்றில் இருக்கும் பாலிபினால்கள்  நம் உடலில்  நச்சுத்தன்மைகளை அகற்றுவதற்கு உதவுகின்றன. சீரகத் தண்ணீரை தொடர்ந்து பத்து முதல் 14 நாட்கள் குடித்து வர  நம் உடலில் சிறந்த மாற்றங்களை காணலாம்.

சீரகத்தண்ணீரை தொடர்ந்து குடிப்பதன் மூலம்  நம் உடலின் ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது .  சீரகத்தில் இருக்கும் தைமால்  என்ற வேதி பொருளானது  இரைப்பையின் சுரப்பிகளை  தூண்டுகிறது. இந்தச் சுரப்பிகள்  புரதம் கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்களை எளிதாக உடைத்து நம் உடலின் செரிமானத்தை இலகுவாக்குவதோடு குடலின்  ஆரோக்கியத்தையும் காக்கிறது.

சீரகத் தண்ணீர்  நம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி உடலில் இருக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. வயிற்றுப் பகுதியில் இருக்கும் தடிமனான கொழுப்புகள்  சீரகத்தில் இருக்கின்ற வேதி பொருள்களால்  எளிதாக உடைக்கப்படுகின்றன. இதனால் உடலை  கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன்  உடல் எடையையும்  நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சீரகமானது புற்றுநோய் தடுப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இது பல்வேறு விதமான  புற்று நோய்களுக்கு தடுப்பு காரணியாக செயல்படுகிறது. இது மெட்டாஸ்டாசிஸைத்  தடுக்கிறது. இதன் காரணமாக புற்றுநோய் கட்டிகள் ஒரு பகுதியிலிருந்து உடலில் மற்ற பகுதிக்கு பரவுவது தடுக்கப்படுகிறது.

சீரக விதையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாகுவதற்கு  இரும்புச்சத்து அவசியம். இது நம் உடலில் ஆக்ஸிஜனை  ரத்தத்தின் மூலம் கடத்துவதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தொடர்ந்து சீரகத் தண்ணீரை குடித்து வர இது இரத்த சோகை காண அறிகுறிகளையும் அவை ஏற்படுவதற்கான  வாய்ப்புகளையும் தடுக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of jeera water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->