தொப்புளில் எண்ணெய் விடுவதினால் உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள்?  - Seithipunal
Seithipunal


நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில் தான் அமைந்துள்ளது. இன்றும்கிராமங்களில் இரவில் அழும் குழந்தைகளுக்கு  தொப்புளில் ஒரு சொட்டு எண்ணை விட  அந்தக் குழந்தைகள் உடனே அழுகையை நிறுத்துவதை  ஆச்சரியத்துடன் காணலாம். இப்படி நரம்புகளின் மைய புள்ளியாக விளங்கும் தொப்புளில் எண்ணெய் விடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்ப்போம்.

நாம் உறங்கச் செல்வதற்கு முன் சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு நெய் சேர்த்து தொப்புளில் விட்டு  ஒரு இன்ச் அளவிற்கு சிறிது நேரம் மசாஜ் செய்தால் கண் வலி மற்றும் சரும  வறட்சி குணமாகும்.

விளக்கெண்ணையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இந்த விளக்கெண்ணையை இரவில் மூன்று சொட்டு தொப்புளில் விட்டு தொப்புளை சுற்றி ஒன்றரை இன்ச் அளவிற்கு மசாஜ் செய்து வர கால் வலி மற்றும் மூட்டு வலி  சரியாகும்.

மருத்துவ குணங்கள் அடங்கிய வேப்பெண்ணையை தொப்புளில் தடவி வர சரும  வியாதிகள் கிருமி தொற்றுகளும் குணமாகின்றன மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

தொப்புளில் எண்ணெய் விடுவதன் மூலம் அவை நரம்புகளின் வழியாகச் சென்று  நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரித்து  நம் உடல் உபாதைகளில்  இருந்து  விடுபட உதவுகின்றன.

 இந்த எண்ணெய் வைத்தியத்தின் காரணமாக உடல் நடுக்கம்,சோர்வு மற்றும் கணைய பாதிப்பு, கர்ப்பப்பை கோளாறுகள் ,உடல் சூடு ஆகியவை நீங்கும். மேலும் இது நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of applying oil in navel


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->