அகத்திக்கீரையின் நன்மைகள் மற்றும் சில கைவைத்தியங்கள் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க! - Seithipunal
Seithipunal


நம் உணவில் தினமும் கீரையை எடுத்து வருவதால் நமக்கு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு  நம் உடலில் ஏற்படுகின்ற பல்வேறு நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகின்றன . அதிலும் அகத்திக்கீரை  புரதம்  வைட்டமின் சி வைட்டமின் ஏ  செலினியம் மற்றும் ஃபோலேட் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய அகத்திக் கீரையை வேகவைத்த தண்ணீரில் தேன் கலந்து குடிப்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

வாரம் ஒரு முறையேனும் அகத்திக் கீரையை உணவில் எடுத்துக் கொள்வதால்  உடலில் உஷ்ணம் நீங்கி கண்கள் குளிர்ச்சி பெறும். மேலும்  இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர பித்தம் குணமாகும்.

அகத்திக் கீரையில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் இது எலும்புகள் மற்றும் பற்களின்  வளர்ச்சிக்கும் அவற்றின் உறுதித் தன்மைக்கும் நன்மை பயக்கிறது.

அகத்திக் கீரையை  உலர்த்தி பொடி செய்து அதனை பாலுடன் கலந்து குடித்து வர வயிற்று வலி குணமாகும். மேலும் அகத்திக்கீரை கொதிக்க வைத்த நீரில்  தேன் கலந்து அருந்தி வர  வயிற்றுப்புண் குணமடையும்.

அகத்திக்கீரை மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து நம் உடலின் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது நமது குடலின் செயல்பாட்டை அதிகரித்து  மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

உலர வைத்து அகத்திக் கீரையை  பொடி செய்து அதனுடன் தேன் கலந்து 45  நாட்கள்  அதை பருகிவர நம் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அகத்திக் கீரையை வேக வைத்த நீருடன் தேன் கலந்து குடிக்க  தலைசுற்றல் வாந்தி குமட்டல் போன்ற தொந்தரவுகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits ad tips of green spinach 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->