இந்த ஒரு பழம் உங்கள் முடி பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்.!  - Seithipunal
Seithipunal


நம்மில் பலருக்கும் தெரியாத மருத்துவக்குணம் நிறைந்துள்ள பழங்களில் ஒன்றுதான் விளாம்பழம். இதன் மரம், இலை ஆகியவற்றிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இப்பொழுது விளாம்பழத்தில் நிறைந்துள்ள பல அற்புத மருத்துவ நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். 

தினந்தோறும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

வறட்டு இருமல், வாய் கசப்பு குணமாக விளா மரத்தின் மரப் பட்டையைப் பொடியாக்கி கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம்.

விளாம்பழத்தின் சதைப்பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு கஸ்தூரி மஞ்சள், பார்லி, பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை எடுத்து அரைத்து, சோப்புக்கு பதிலாக குளிக்கும்போது இதைப் பயன்படுத்தலாம். இதனால் தோல் மிருதுவாவதுடன் கரும்புள்ளிகள் மறையும்.

நரம்புத் தளர்ச்சி குணமாக விளாம்பழத்தை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.

தயிருடன் விலாங்காயை சேர்த்து பச்சடி போல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாகும்.

தினந்தோறும் ஒரு விளாம்பழம் என 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் சரியாகும் மற்றும் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

இன்று ஆண், பெண் இருபாலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடிக்கொட்டுவது தான். இதற்கான எளிய தீர்வாக விளா மரத்தின் இலை உள்ளது.

முடி கொட்டும் பிரச்சனையைப் போக்க 50 கிராம் விளா மரத்தின் இலை, 100 கிராம் சுருள் பட்டை, 2 டீஸ்பூன் வெந்தயம், 10 கிராம் வெட்டிவேர் ஆகியவற்றை கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தைலத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து தினந்தோறும் தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் அடி முடி வரை படும்படி தடவி வந்தால் முடி கொட்டுவது நிற்பதுடன், கருகருவென வளர தொடங்கும்.

மேலும் தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்க, விளா மரத்தின் இலை, செம்பருத்தி இலை ஆகியவை தலா 5, கொட்டை நீக்கிய பூந்தித் தோல் 4 ஆகியவற்றை எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hair fall remedies in tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->