சர்க்கரையின் அளவை குறைத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலானோர் உணவு பழக்கவழக்கத்தில் மிகுந்த கவனத்துடன் இருந்து வந்தாலும் தொப்பை ஏற்படுவது மற்றும் உடலின் பிற பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனைப்போன்ற பிரச்சனையால் மனவருத்தம் பலரை ஆட்கொண்டுள்ள நிலையில்., நாம் உண்ணும் உணவில் நமக்குத்தெரியாத சில பாதிப்புகள் உள்ளது. 

இவ்வாறான பாதிப்புகளை கொண்டுள்ள சர்க்கரை குறித்து இன்று சில விழிப்புணர்வை காணலாம். தற்போது சர்க்கரை என்பது அனைவரும் அதிகளவு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாகிவிட்டது. கூடுதல் சர்க்கரை உடலின் ஆரோக்கியத்திற்கு முதல் எதிரியாகும். இனிப்பு சுவையுள்ள உணவு பழக்கவழக்கம் பெரும்பாலானோருக்கு இருந்து வருகிறது. 

சர்க்கரை குறித்த விஷயத்தில் பெரும்பாலானோர் கவனம் செலுத்தாமல் இருந்து வரும் நிலையில்., கூடுதல் சர்க்கரை பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலேயும்., உடலின் செயல்பட்டு திறன் மாற்றமடைந்து வயதிற்கேற்ப நோயின் பாதிப்பும் மாறுபடுகிறது. சர்கரையினை தவிர்ப்பதன் மூலமாக ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம். 

சக்கரையின் அளவு அதிகரிப்பது உயர் இரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கும். மேலும்., உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இதய பாதிப்பு., இரத்த குலை அடைப்பு., மாரடைப்பு., வாதம்., சிறுநீரக பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. சர்கரையினை அளவாக பயன்படுத்துவது கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கும். மாரடைப்பு பிரச்சனை வெகுவாக குறைகிறது. 

கொழுப்புகள் அதிகளவில் சேர்ந்து கல்லீரலில் ஏற்படும் பாதிப்பினை குறைகிறது. புற்றுநோயிக்கான அபாயம் குறைகிறது. சுவாசம் தொடர்பான பிரச்சனை சீராகிறது. உடலின் சக்தி அதிகரிக்கிறது., மூளை சுறுசுறுப்பாக இயங்குதல்., மறதி நோய் பாதிப்பு., மனஉளைச்சல் பிரச்சனை., பசி குறைவு., சருமம் இளமையாக இருத்தல்., பல் தொடர்பான பிரச்சனை சரியாதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.                                

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

good things for decline sugar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->