மார்பக புற்றுநோயை ரூ.50 செலவில் கண்டறியும் சென்சார்கள் பொருத்தப்பட்ட உள்ளாடை.! ஆராய்ச்சியில் கிடைத்த வெற்றி.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாக மார்பக புற்றுநோய் உள்ளது. இந்த புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறியும் பட்சத்தில்., இந்த புற்றுநோயை தவிர்க்க இயலும். இந்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வானது பெரும்பாலான பெண்களுக்கு தற்போது இல்லை என்பதால்., இந்த புற்றுநோயின் தாக்கத்தால் பல பெண்கள் அவதியுற்று வருகின்றனர். 

இந்த புற்றுநோயை துவக்கத்தில் கண்டறிவதற்காக பெண்கள் அணியும் உள்ளடையான பிராவில் சில மாற்றங்கள் செய்து., அதற்கான கருவியை பொருத்தி மார்பக புற்றுநோயை கண்டறியும் கருவியை கேரள மாநிலத்தை சார்ந்த முனைவர் சீமா என்பவர் கண்டறிந்துள்ளார். இவர் தயாரித்த மார்பக புற்றுநோயை கண்டறியும் உள்ளாடையை வைத்து சுமார் 250 பெண்களுக்கு சோதனை செய்யப்பட்ட நிலையில்., ஒரு பெண்ணிற்கு இந்த பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த பெண்ணிற்கு மார்பக புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த அவர்கள் மருத்துவமனைக்கு சென்று மேற்கொண்ட சோதனையில்., மார்பக புற்றுநோய் துவக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலமாக தற்போது அந்த பெண் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து முனைவர் சீமாவிடம் கேட்ட போது அவர் எதற்காக இந்த உள்ளாடையை தயாரித்தார் என்பதற்கான பதிவை பதிவு செய்துள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக எனது காதுகளில் உறக்கமில்லாமல் விழுந்த சொற்களே தற்போது நான் இந்த மார்பக புற்றுநோயை கண்டறியும் கருவியை கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது. இந்த ஆய்வானது புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர் சதீஸ் மூலமாக., கேரளாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்டது. 

இந்தியாவை பொறுத்த வரையில் வருடத்திற்கு சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் மேலான பெண்கள் மரபாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் நாற்பது வயதிற்கும் அதிகமான பெண்கள்., அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்., இந்த புற்றுநோயை துவக்கத்தில் கண்டறிந்தால் பல பாதிப்புகளை தடுக்க இயலும். கடந்த 2018 ம் வருடத்திலேயே இதற்கான தீர்வை கண்டைத்த நிலையில்., தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக பெண்கள் அணியும் உள்ளடையான பிராவில் சென்சார்கள் பொருத்தப்பட்டு., பெண்கள் அணியும் சமயத்தில் அவர்களின் உடல் நிலைக்கேற்ப கணினிகளுக்கு கிடைக்கும் புகைப்படங்களின் மூலமாக மார்பக புற்றுநோய் அவர்களுக்கு உள்ளதா? இல்லையா? என்பதை எளிதாக கண்டறியலாம். இந்த அமைப்பானது உடலின் வெப்பத்தை பொறுத்து செயல்படுகிறது. 

மார்பகத்தில் இருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களின் மூலமாக உடலின் வெப்பத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய சென்சார்கள் உருவாக்கப்பட்டு., காட்டன் துணியினால் ஆன உள்ளாடைக்குள் வைத்து., அந்த உள்ளாடையை பெண்கள் அணிந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியலாம். இதன் மூலமாக மார்பக புற்றுநோய் இருக்கும் என்றால் துவக்கத்திலேயே கண்டறிந்து விடலாம். இந்த செயல்முறையில் எந்த விதமான கதிர்வீச்சு தாக்கமும் கிடையாது. 

இந்த முறையை சுமார் 10 வயதுடைய பெண்கள் மூலமாகவும்., தேவை ஏற்படும் பட்சத்தில் சிறுமிகளுக்கும் உபயோகம் செய்யலாம். இதன் மூலமாக அவர்களின் தனிமைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டது. எவ்வித தயக்கமும் இன்றி இந்த ஆடையை அணிந்து நமது உடல் நலத்தை பாதுகாக்கலாம். வரும் எதிர்காலத்தில் ரூ.50 செலவில் கூட இந்த சோதனையை எளிதாக செய்து விடலாம். 

இந்தியாவில் இருக்கும் கிராமங்களில் கூட சூரிய ஒளியை வைத்து சார்ஜ் ஏற்றி இந்த கருவியை உபயோகம் செய்யலாம். இந்த ஆராய்ச்சியின் துவக்கத்தில் சுமார் 24 மணிநேரமும் உள்ளாடையின் வெப்பத்தை கண்காணித்த நிலையில்., தராது ஆராய்ச்சி நல்ல பலனை அளித்துள்ளது. விடுமுறை நாட்களிலும் எனது மாணவிகளுடன் சேர்ந்து பணியாற்றி இந்த வெற்றியை அடைந்துள்ளோம்.  

இந்த மார்பக புற்றுநோயை கண்டறியும் உள்ளாடையை கண்டறிந்த பின்னர் நான் அணிந்து பரிசோதனை செய்தேன்., எனக்கு பின்னர் என்னுடன் பணியாற்றிய அனைத்து நபர்களும் சோதனை செய்தனர். இந்த கருவியை கொண்டு சுமார் 250 பெண்களுக்கு சோதனை செய்த நிலையில்., இந்திரா என்ற பெண்ணிற்கு மட்டும் மார்பக புற்றுநோய் துவக்கத்தில் இருபது தெரியவந்தது. இதன் மூலமாக அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கி., அவரை மார்பக புற்றுநோயில் இருந்து குணப்படுத்தினோம் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls affected breast cancer to avoid test with breast cancer sensor bra wearing


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->