உங்களுக்கு மாதவிடாயா?... மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்டுவிடாதீர்கள்..! - Seithipunal
Seithipunal


மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் சோர்வாக காணப்படுவர். குறிப்பாக வயிறு வலி, வயிறு இறுக்குதல் , அசதி போன்றவை அவர்களை பெரும்பாலும் பாதிக்கும். மாதவிடாய் காலண்களில் பெண்கள் தங்கள் உணவு பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை குறித்து பார்போம்.

உப்பு உணவுகள்:

மாதவிடாய் காலங்களில்  உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அதே போல பதப்படுத்தப்ட்ட சிப்ஸ்களையும் நொறுக்கு தீனிகளையும் தவிர்க்க வேண்டும். பசியின்மை தவிர்க்கலாம்.

மைதா உணவுகள் : 

மைதா சம்பந்தபட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதனால், மலசிக்கல், அஜீரணம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளை தவிர்க்கபடும்.

சர்க்கரை உணவுகள் : 

மாதவிடாய் காலங்களில் சர்க்கரை சேர்த்த உணவுகளை சேர்த்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பதட்டம், திடீரென மன அமைதி, வயிறு இறுகுதல் போன்றவை ஏற்படும். இதனால், அவற்றை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் உணவுகள் : மாதவிடாய் காலங்களில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்புகள் உங்களுக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும்.

உண்ணக்கூடிய உணவுகள் :

மாதவிடாய் காலங்களில் தயிர் , நட்ஸ் , இஞ்சி, பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் , டார்க் சாக்லெட், வாழைப்பழம், சோம்பு , பழங்கள் போன்றவை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foods To Avoid During Menstruation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->