மாதவிடாய் நேரத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பானங்கள்.!!  - Seithipunal
Seithipunal


மாதவிடாய்... மாதவிடாய் என்பது பருவமடைந்த பெண்களுக்கு மாதத்தின் மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை சுமார் நாற்பது வயது முதல் ஐம்பது வயது வரை ஏற்படும் ஓர் இயற்கையான நிகழ்வாகும். 

இந்த நேரத்தில்., பெண்கள் அனுபவிக்கும் துன்பத்தை எத்துணை வார்த்தைகளால் விவரித்தாலும்., அவர்களின் வலியை அவர்கள் மட்டுமே தாங்கி கொள்வார்கள். அந்த வலியை உணராத வரை., மாதவிடாய் என்பது சிலருக்கு ஏளன நிகழ்வேயாகும். 

இந்த சமயத்தில்., உடலளவில் வலிகளுக்கு உள்ளாகிய நிலையில்., அதிகளவு கோபத்துடனும்., இரத்த போக்கால் உடலின் சக்தியை இழந்தும் காணப்படுவார்கள். மாதவிடாயின் போது சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது குறித்து இனி காண்போம்.. 

மாதவிடாய் நேராதல் இரும்பு சத்துள்ள மற்றும் வைட்டமின் சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. வெள்ளை பிரட்., பாஸ்தா மற்றும் பாக்கெட்டுகளில் இருக்கும் திரிந்த உணவுகள்., சிப்ஸ்., கேக் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

அதிகளவு கொழுப்புகள் நிறைந்த உணவு., எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுகள்., துரித உணவுகள்., அதிகளவு கொழுப்புகள் கொண்ட இறைச்சி., சீஸ் போன்ற பொருட்களை தவிர்ப்பதும்., அதிகளவு இரத்த போக்கானது காணப்பட்டால் உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்ப்பதும் நல்லது. 

இந்த சமயத்தில் இனிப்பு சுவையுள்ள மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்கள்., சோடா கலந்துள்ள இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவுகளையும்., மது அருந்தும் பழக்கமுள்ள பெண்கள் மதுவை அருந்துவதையும் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. 

English Summary

during periods days what type of food to avoid for good health


கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
Seithipunal