சுகப்பிரசவம் மூலம் குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் கவனமாக இல்லாவிடில் ஏற்படும் கர்ப்பப்பை இறக்கம்.!! - Seithipunal
Seithipunal


தனது குழந்தையை கருவில் சுமக்கும் அனைத்து தாயாருக்கும் இருக்கும் ஒரே விருப்பமாக குழந்தைகளை சுக பிரசவமாக இருக்க வேண்டும் என்று தான். ஏனெனில் அறுவை சிகிச்சை முறையில் வயிற்றை கிழித்து., குழந்தையை வெளியெடுத்து பின்னர் சுமார் ஒரு வார கால அளவிற்கு படுக்கையில் இருக்க வேண்டும்., சுமார் 6 மாதத்திற்கு கடினமான பணியை பார்க்க கூடாது என்று இருக்கும். 

இதன் காரணமாக சுக பிரசவத்தை விரும்பம் தெரிவிக்கும் பெண்கள் அதிகளவில் உள்ளனர்., இதுமட்டுமல்லாது சுகப்பிரசவம் அதிக நல்லதும் கூட... பிரசவத்திற்கு பின்னர் சில நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாக கர்ப்பப்பை இறக்கத்தை தவிர்க்க இயலும். அவ்வாறு கவனமாக சுக பிரசவத்திற்கு பின்னர் இருக்கும் பட்சத்தில் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க இயலும். 

சுக பிரசவ சமயத்தில் அதிகளவு சிரமப்பட்டு தாய் குழந்தையை வெளியேற்றுகிறார். இந்த நேரத்தில் தாயின் இடுப்பெலும்பு தசையானது அதிகளவு தளர்ந்து பின்னர் குழந்தையை வெளியேற்றும். இந்த கர்ப்பப்பை இறக்கம் பிரச்சனையானது துவக்கத்தில் தெரிந்தால் சரி செய்வது சுலபமான ஒன்று. வலை போன்ற அமைப்பை கொண்டு கர்ப்பப்பையின் பின் புறம் மற்றும் இனொரு முனையை இடுப்பெலும்பு பகுதியில் வைத்து தைப்பதன் மூலமாக இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். 

இந்த பிரச்சனையை துவக்கத்தில் இருந்து கவனிக்காமல் இருந்தால் சிறுநீர்ப்பை மற்றும் மலப்பையை சேர்த்து இழுக்க துவங்கும்., இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க கூடிய உணர்வும்., சிறுநீர் முழுவதுமாக வெளியேறாதது போன்ற உணர்வும்., அதிகநேரம் சிறுநீர் தேங்கி தோற்று ஏற்படவும்., சிறுநீர் பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. 

இதுமட்டுமல்லாது மலப்பை இறங்கும் பிரச்சனையும் இருக்கும் என்ற காரணத்தால்., இதனை முதலிலேயே சரி செய்து கொள்வது நல்லது என்றும்., கர்ப்பப்பை இரக்கத்தை சரி செய்யும் பட்சத்தில்., சிறுநீர் பை மற்றும் மலப்பை சேர்த்து தூக்கி வைத்து தைக்க வேண்டிய சூழல் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இதனை கவனிக்காத பட்சத்தில் கர்ப்பப்பை அகற்றக்கூடிய நிலை கூட ஏற்படலாம்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

during natural pregnancy what was the problem is there before caution


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->