உறங்கும் முன் அத்திப்பழம் கலந்த பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? - Seithipunal
Seithipunal


பாலுடன் அத்திப்பழத்தை கலந்து குடிப்பதால் குளிர்காலத்தில் நம் உடலுக்கு  பல்வேறு வகையான நன்மைகளை  இவை கொடுக்கிறது. அத்திப்பழத்தில் விட்டமின் ஏ, சி, கே துத்தநாகம், இரும்பு, தாமிரம், மக்னீசியம்  மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீரிழிவு நோய் இருப்பவர்களும் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

தூங்குவதற்கு முன் அத்திப்பழம்  கலந்த பாலை குடிப்பதன் மூலம் நல்ல தூக்கத்தை பெறலாம். அத்திப்பழத்தில் இருக்கக்கூடிய டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் செரோடோனினாக மாற்றப்படுகிறது. இது  மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை அதிகமாக சுரக்கச் செய்து  நல்ல உறக்கத்தை பெற உதவுகிறது.

அத்திப்பழம் கலந்த பாலை குடிப்பதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் இது  எலும்புகள் மற்றும் பற்கள் உறுதி பெறவும்   உதவுகிறது. மேலும் மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தவும்  தசைகள் மற்றும் மூட்டு வலிகளை குணமாக்கவும் பயன்படுகிறது. செரிமானத்தை தூண்டுவதோடு உடலின் வளர்ச்சி மாற்றத்தையும் அதிகப்படுத்தும்.

அத்திப்பழத்தில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் அதிக நேரம் பசி எடுக்காமல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தேவையான சக்தியையும் கொடுக்கிறது. இதன் காரணமாக  உடல் எடை குறைப்பதற்கு  நன்மை அளிக்கக்கூடிய ஒன்று.

அத்திப்பழம் கலந்த பால் குடிப்பது  மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்துக்கள்  நம் உடலின் வளர்ச்சிதை  மாற்றத்தை  மேம்படுத்துவதோடு  குடலின் செரிமான தன்மையையும்  உடலின் இயக்கத்தையும்  மேம்படுத்துகின்றன.

இதில் இருக்கக்கூடிய இரும்பு சத்துக்கள்  நம் உடலின்  சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதோடு இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இது  ரத்தத்தை சுத்திகரிப்பதற்கும் உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drink a cup of milk with figs and get these benefits


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->