கொரோனாவுக்கு பயந்து இதெல்லாம் செய்தாலும் ஆபத்து தான்.! உஷார்.!  - Seithipunal
Seithipunal


நீண்ட நேரம் முக கவசத்தை அணிவதால் வியர்வை அப்படியே முகத்தில் படிந்து இருக்கும். எனவே, வீட்டிற்கு வந்தவுடன் முகத்தை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். சுடுநீரில் அவ்வப்போது ஆவி பிடிப்பதும் நல்லது. சருமத்துளைகளில் படிந்து இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவும். 

முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்னர் மாய்ச்சுரைசரை தடவுவது நல்லது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க அது உதவும். வறண்ட சருமம் கொண்டவர்கள் ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியம். எண்ணை பசை இல்லாத மாய்ச்சுரைசரை பயன்படுத்துவது நல்லது. 

முகக்கவசம் அணிந்தாலும் கூட சன்ஸ்கிரீன் முகத்தில் போடுவது வறண்ட நிலை வராமல் தடுக்கும். வைரஸ் காரணத்தால் கைகளை சானிடைசர் கொண்டு கழுவும்பழக்கம் அதிகரித்து விட்டது. வைரசை தடுக்க சானிடைசர் போட்டு அடிக்கடி கைகளை கழுவுவதால் ஆல்கஹால் கலந்த சாயத்தை பயன்படுத்துவதால் கைகளில் ஆரோக்கியத்தை பராமரிக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் அது தடுக்கிறது. 

தொடர்ந்து கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்தினால் வறட்சி ஏற்படுகிறது. சரும செல்கள் உதிரும் பிரச்சனை உருவாகும். எனவே, வெளியில் சென்று வந்தால் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவுவது நல்லது. சானிடைசர்- ஐ முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. பாதுகாப்பாக இருக்க மட்டும் கவசத்தை அணையுங்கள். சூடான நீரை பருகுங்கள். நன்றாக கைகளை சோப்பு போட்டு கழுவி வந்தால் நலம். சானிடைசரை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dont use sanitizer too much


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->