காலையில் வெறும் வயிற்றில் இதையெல்லாம் சாப்பிட்டால் விரைவில் சங்கு தான்.! உஷார்.!  - Seithipunal
Seithipunal


காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்று அனைத்து மருத்துவர்களும் கூறுவார்கள். இது அனைத்து ஆரோக்கிய இதழ்களிலும் வெளியாகி வருகின்றது. நாம் ஒரு நாளை ஆரோக்கியமாக கடத்த நமக்கு காலை உணவு அவசியமாகிறது.

ஆனால் இப்படி காலை உணவை சாப்பிடுவது முக்கியம்தான் என்றாலும், எந்த உணவுகளை நாம் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியமானது. நாம் காலையில் கீழ்காணும் உணவுகளை எடுத்துக் கொண்டால் அது விஷயத்திற்கு சமமாக செயல்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகளை எல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றிய தகவல்களை காண்போம்.

நார்ச்சத்து மிக்க உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது தான். ஆனால் காலை நேரத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் வயிற்று வலி உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

காலையில் மசாலா அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காரசாரமான பொரித்த உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிட்டு விடாதீர்கள். இதனால், வயிற்றில் எரிச்சல் மற்றும் அஜீரண கோளாறு ஏற்படலாம். இதனால் வயிறு மற்றும் மார்பில் அசௌகரியம் ஏற்படும். 

அதுபோல வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது ஸ்லோ பாய்சன் போன்ற தீங்கை உடலுக்கு ஏற்படுத்தும். இதனால் உடலில் இருக்கும் சிறுநீரகம் செயலிழக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது. நீரிழிவு, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட நோய்களை அதிகம் ஏற்படுத்திக் கூடியது இதுபோல வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் தான் என்று கூறப்படுகிறது.

மேலும், வெறும் வயிற்றில் ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு. இது நமது உடலில் இருக்கும் செரிமான சக்தியை குறைக்கும்.

வெறும், வயிற்றில் ஆல்கஹால் சாப்பிடக்கூடாது. இதனால், ரத்தத்தில் ஆல்கஹால் வேகமாக பரவுவதோடு கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு கல்லீரலை கெடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't eat some food in morning


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->