கடிகாரத்தை நிறுத்துவதுபோல், 3 நாட்கள் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்திய மருத்துவர்கள்! - Seithipunal
Seithipunal


சீனாவின் பியூஜியன் மாகாணத்தில் உள்ள சியாமென் பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு 26 வயது. அப்படியே மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் முதலில் அவருக்கு எக்மோ (ECMO) சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலையில் முன்னேற்றமும் எதையும் ஏற்படாததால், மருத்துவர்கள் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்தனர். 

இந்த அறுவை சிகிச்சையின்போது இதயத்துடிப்பு இருக்கக்கூடாது என்பதற்காக இதயத்தில் உள்ள ஒரு குழாயைத் துண்டித்து அறுவை சிகிச்சையைத் செய்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பின் மீண்டும் இதயத்தில் துண்டித்த குழாயை இணைந்து உள்ளனர். 

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. இதனால் அந்தப் பெண்ணும் இப்போது நலமாக உள்ளார் என மருத்துவர்கள் கூறினார். 72 மணிநேரம் மனித இதயத்தின் துடிப்பை நிறுத்திவைத்து மீண்டும் இயங்க வைத்திருப்பது மருத்துவ உலகில் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. 
 

English Summary

doctors 26 year old woman heart bite stopped for 3 days


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal