நமது உடலுக்கு நன்மை சேர்க்கும் பாக்டீரியாக்களை தேடாமல் உணர்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள மாசடைந்த காலநிலையில் வாழ்ந்து வரும் நாம் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். அவ்வாறு நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் உணவு பொருட்களை பற்றி இந்த பதிவில் காண்போம். 

வைட்டமின்: 

நமது உடலுக்கு வைட்டமின் ஏ., வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை இயற்கையாகவே நோயை எதிர்க்கும் தன்மையை கொண்டுள்ளதால்., உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து., உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் நோய் கிருமிகளை அழிக்கிறது. இந்த வைட்டமின்கள் நமது உடலில் அதிகரிப்பதற்கு கேரட்., பச்சை காய்கறிகள்., தக்காளி., செரிப்பழம்., நெல்லிக்காய்., கொய்யாப்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள வேண்டும். 

துத்தநாகம்: 

துத்தநாக சத்துக்களின் மூலமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது வெகுவாக அதிகரிக்கிறது. நமது உடலில் துத்தநாக சத்தானது குறையும் பட்சத்தில்., உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது இயற்கையாகவே குறையும். துத்தநாக சத்துக்களை அதிகரிப்பதற்கு பின்ஸ்., சிப்பி வகை மீன்கள்., பால் மற்றும் தயிர்., பருப்பு வகை உணவுகளை சாப்பிட்டால் துத்தநாக சத்தானது நமது உடலில் அதிகரிக்கும். 

எலுமிச்சை சாறு: 

நமது உடலில் இருக்கும் நன்மை வழங்கும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை அதிகரிக்க எலுமிச்சை சாறானது உதவுகிறது. இதில் அதிகளவு அமிலத்தன்மை இருந்தாலும்., இதில் இருக்கும் சத்துக்களின் மூலமாக உடலுக்கு நன்மை வழங்கும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். இதன் மூலமாக உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியவை எதிர்த்து போராடி நமது உடலை பாதுகாக்கிறது. இது மட்டுமல்லாது உடலின் வெப்ப நிலையும் அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

ப்ரோபயாடிக்: 

இந்த வகையான ப்ரோபயாடிக் சத்துக்களானது தயிர் போன்ற பொருட்களில் இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாடிக் என்று பெயர். இதன் மூலமாக நமது உடல் நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கிறது. 

இயற்கை உணவுகள்: 

இன்றுள்ள காலத்தில் பெரும்பாலான மக்கள் விரைவு உணவுகளின் உணவுகளுக்கு அடிமையாகியுள்ள நிலையில்., இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்ளவது., நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்து., நமது உடலின் நலத்தை பாதுகாக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do you eat this type of good bacteria to gain more health for your body


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->