இந்த பிரச்சனையும் கரோனா வைரஸின் அறிகுறியா?! ஆய்வில் பகீர் தகவல்!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தற்போது மக்களின் ஒருமித்த அச்சம் கரோனா வைரஸ் குறித்து தான். சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளில் முழுவதும் பரவி பல உயிர்களை பறித்துவருகிறது. 

இந்த வைரஸின் அறிகுறிகளாக சளி இருமல் தொண்டை புண் காய்ச்சல் போன்றவை குறிப்பிட்டிருந்தார்கள். இதனை மட்டுமே இதுவரை கரோனா வைரஸ் இன் அறிகுறிகளாக கூறிக்கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது செரிமான பிரச்சனையும் கரோனா வைரஸ் இன் அறிகுறிகளாக இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸால் தாக்கப்பட்ட 50 சதவீத பேருக்கு செரிமான பிரச்சினைகள் இருந்ததாக தெரியவந்துள்ளது. 

மேலும் இந்த வைரஸின் தொற்று உள்ளவர்கள் பெரும்பாலானோர் வயிற்றுப்போக்கு பசியின்மை பிரச்சினைகளும் ஏற்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. மேலும் சிலருக்கு வயிற்று வலி வாந்தியால் அவதிப்பட்டு உள்ளனர் சிலருக்கு செரிமான பிரச்சனைகள் மட்டும் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Digest problem is also symptoms for Corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->