அத்தி என்ற பெயரை கேட்டாலே என்ன ஒரு ஆனந்தம்.! அத்தி பழத்தின் அருமையான நன்மைகள்.!! - Seithipunal
Seithipunal


நமது வாழ்வில் பெரும் அங்கம் வகித்த பொருட்களில் மறக்க முடியாத பொருட்களில் ஒன்று அத்திப்பழம். இந்த பழத்தை சிறுவயதில் அல்லது வீட்டில் இருக்கும் சமயத்தில் நமது பெற்றோர் வாங்கி வரும் போது., உடன் பிறந்தவர்களுடன் சண்டையிட்டு., போட்டி போட்டுகொண்டு சாப்பிடுவது வழக்கம். 

அந்த வகையில்., வெளியூரில் பணியாற்றும் நேரத்தில்., பல விதமான உணவுகளை மறந்த நாம் வாழ்ந்து வருகிறோம். மறந்த உணவில் அத்திப்பழத்தை பற்றிய மருத்துவ குணங்களை பற்றி காண்போம். பெரு நகரங்களில் பணியாற்றும் பலர் அத்திப்பழத்தை கடைக்கு சென்று சாறு வகையில் பருகுவது உண்டு. 

அத்திப்பழத்தின் மூலமாக உடலுக்கு ஜீரண சக்தி கிடைத்து சுறுசுறுப்பை தரும். உடலில் இருக்கும் கரும் பித்தம் பிரச்னையை வியர்வையின் மூலமாக வெளியேற்றி ஈரல் மற்றும் நுரையீரல் பகுதியில் இருக்கும் தேவையற்ற தடுப்புகளை நீக்கி நமது உடலை பாதுகாக்கிறது. 

தினமும் இரண்டு அத்திப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி., தலை முடியானது நீளமாக வளருகிறது. 

மெலிந்த உடலுடன் இருக்கிறேன் என்று வருத்தம் அடைபவர்கள்., தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலின் இரத்த உற்பத்தியானது அதிகரித்து., உடலும் பருமனடையும். 

இரவு நேரத்தில் ஐந்து அத்திப்பழங்களை சாப்பிடுவதன் மூலமாக மலச்சிக்கல் பிரச்னையை எளிதில் குணப்படுத்த இயலும். 

மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த அத்திப்பழத்தை வினிகரில் ஒரு வாரத்திற்கு ஊற வைத்து., தினமும் இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும். 

அத்திப்பழத்தை சாறாக பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்., மூல நோய்யானது எளிதில் குணமாகும். மேலும்., அத்திப்பழத்தின் இலைகளை தூளாக அரைத்து வைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர பித்தம் மற்றும் பித்தம் சம்பந்த நோய்கள் குணமடையும். 

English Summary

did you eat aththipalam to gain more health and good for wealth


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal