சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து மீள இதை செய்தால் பலன் கிடைக்கும்.!  - Seithipunal
Seithipunal


தற்போது இந்தியாவில் பலருக்கும் சர்க்கரை நோய் பொதுவாக வந்துவிட்டது. இது குறித்து நிறைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு தீர்வாக பல விஷயங்கள் கூறப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் சர்க்கரை நோய் ஒரு நோய் இல்லை என்றும் அது ஒரு குறைபாடு தான் இதை உணவு பழக்க வழக்கங்களை வைத்து சரி செய்து விடலாம் என்று கூறப்படுகிறது. எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் எப்படி அன்றாடம் பராமரிக்க வேண்டும் என்பது பற்றி விவரங்களை பார்க்கலாம். 

காலையில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். உடலை நீர் சத்துடன் எப்போதும் வைத்திருக்க வேண்டும். நிறைய நீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும். 

தங்களது உடல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பது அவசியம். காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் அடிக்கடி உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு பரிசோதனை செய்து மருத்துவரை அணுகும் போது ஏதாவது மாற்றம் இருந்தால் அதற்கு ஏற்றார் போல மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம். 

உடல் உழைப்புகள் இருந்தால் சர்க்கரை நோயை எளிதாக குணப்படுத்தலாம். எனவே, உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் அன்றாடம் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் வரை நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diabetic patient should follow these instructions


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->