விருட்ச சாஸ்திரம் : வீட்டில் முருங்கை மரம் வளர்க்கலாமா? - Seithipunal
Seithipunal


வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் அது பல நன்மைகளை தரும். அதிலும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் எண்ணற்ற பயன்கள் கிடைக்கும். 

முருங்கையின் கிளைகள் வேண்டுமானால் எளிதாக உடைந்து விழும். ஆனால் முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களை கொண்டவை.

முருங்கைக்காய் நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். முன்பெல்லாம் சிறிதாக இருந்த முருங்கைக்காய் தற்போது ஒரு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடிய அளவில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முருங்கைக்காய் பிரட்டல், குழம்பு போன்றவை செய்ய பயன்படுத்தலாம். 

முருங்கைக்கீரையை வதக்கி அல்லது வறுத்து உணவுக்குப் பயன்படுத்தலாம். இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது.

முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாக காய்ச்சி காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

முருங்கை மரத்தை வீட்டிற்கு முன் ஏன் வளர்க்கக்கூடாது?

மரங்களில் மிகவும் மென்மையான கிளைகளை கொண்ட மரம் முருங்கை மரம் ஆகும். 

இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால் வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும். இது போன்ற காரணங்களால் முருங்கை மரத்தை வீட்டிற்கு முன் வளர்க்கக்கூடாது என்கிறார்கள்.

வீட்டில் முருங்கை மரத்தை எங்கு வளர்க்கலாம்?

வேப்பமரத்திற்கு அருகில் முருங்கை மரத்தை வைக்கலாம். 

வீட்டின் முன்பு முருங்கைமரம் இருப்பதை விட வீட்டின் பின்புறம் இருப்பது நன்மை அளிக்கும்.

வீட்டின் வாசலுக்கு நேராக, குறிப்பாக நிலக்கதவிற்கு நேர் எதிராக முருங்கை மரம் வளர்க்கக்கூடாது. 

வீட்டில் முருங்கை மரத்தை எந்தெந்த திசையில் வைக்க வேண்டும்?

வீட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியை விட மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் முருங்கை தோட்டம் அமைக்கலாம்.

முருங்கை மரத்தை விதைப் போட்டு வீட்டில் வளர்க்கலாமா? 

முருங்கை மரத்தை விதைப் போட்டு வீட்டில் வளர்க்கலாம். வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு புறத்தில் வளர்ப்பது மிகச் சிறப்பு. மேலும், வீட்டின் முன்புறத்தை தவிர்த்து பின்புறத்தில் மரம் வைப்பது சிறப்பாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Can a drumstick be grown at home


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->