பிஸ்கட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


இன்றளவில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலும் விரும்பப்படும் உணவாக இருப்பது பிஸ்கட். வயது வித்தியாசமின்றி அவரவர்களுக்கு பிடித்த பல வகைகளில் இருக்கும் பிஸ்கட்களை வாங்கி உண்ணுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

இன்றுள்ள வளர்ச்சியின் காரணமாக இனிப்பு பிஸ்கட், உப்பு பிஸ்கட் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் உள்ள பிஸ்கட் என்று பலவகையான பிஸ்கட்கள் உள்ளது. அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கும் பிஸ்கட் வகைகளை சாப்பிடுவது வழக்கமான ஒன்றாகவுள்ளது. பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இனி காண்போம். 

நாம் இன்றளவில் காலையில் பல விதமான காரணங்களுக்காக காலையில் சாப்பிடாமல்., தேநீர் மற்றும் இரண்டு பிஸ்கட்டுகளை சாப்பிட்டு இருக்கிறோம். இதன் காரணமாக நாளடைவில் நமக்கு வயிற்றுப்புண் மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படும் பிரச்சனைகள் அதிகளவு உள்ளது. நாம் சாப்பிடும் பிஸ்கட்டில் அதிகளவு இருக்கும் சர்க்கரை கொழுப்பு அமிலங்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

biscuit, பிஸ்கட்,

இந்த சர்க்கரை கொழுப்பு அமிலமானது பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்பநிலையில் எண்ணெய்யை ஊற்றி சூடு படுத்தும் நேரத்தில் உருவாகும் மற்றும் இதன் பரவும் தன்மை எத்தனை விழுக்காடு என்பதை பிஸ்கெட் கவர்களில் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் அதிகளவில் உடலில் சேர்ந்து கொழுப்பின் அளவை அதிகரித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. 

மேலும்., பிஸ்கட் கெடாமல் இருப்பதற்கு உப்பு மற்றும் பிற இரசாயன பொருட்களும் கலக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்களை கொண்ட நபர்கள் பிஸ்கட் சாப்பிடுவது தேவையற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். பிஸ்கட்டை பதப்படுத்த சில சமயத்தில் வேதிப்பொருள்களையும் உபயோகம் செய்யலாம். இதனை அளவுடன் சாப்பிடுவது நல்லது. இல்லையேல் வீட்டில் செய்யப்படும் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது நல்லது. 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biscuit is injurious to health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->