எல்லா இடத்திலும் இருக்கும்.,சிலந்தி நாயகத்தின் நன்மை பற்றி தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


சிலந்தி நாயகம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் காணப்படும். முக்கியமாக சாலையோரங்களில், ஆற்றங்கரைகளில், ஈரமான களிமண் நிலங்களிலும் அதிகமாகக் காணப்படும். இதன் பிறப்பிடம் இந்தியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்கா. இது ஆசியாவிலிருந்து வட ஆப்பிரிக்காவுக்குப் பரவியது. பசிபிக் தீவிலும் காணப்படும். இது ஒரு தரையில் படரக்கூடிய சிறு செடி. எதிர் அடுக்கில் அமைந்த ஈட்டி வடிவ பச்சை இலைகளையுடையது.

வேறுபெயர்கள்: கிரந்திநாயகம்,. கிரந்தி நாயகன்,கிரந்தி நாயன் தாவரவியற் பெயர்: Ruellia tuberosa தோட்டம். நந்தவனம், வேலிஓரம் போன்ற இடங்களில் பச்சைப்பசேலென்ற இலைகளுடன் வளரும் சிறு செடிவகை, இதன் இலை சுடுகாட்டுப்பூ இலைபோல் இருக்கும். ஊதா நிறமான சிறிய பூக்களை புஷ்பித்து சுமார் 3 செ.மீ. நீளமுள்ள காய்களைக் காய்க்கும் காய் முற்றிப் பழுத்தபின்அது உலர்ந்து தானே வெடிக்கும். விதைகளை சிதறும் சிறுவர்கள் இதனை தண்ணீரில் நனைத்து வைத்து அது வெடிப்பதை வேடிக்கை பார்ப்பார்கள்.

இதன் இலை மருத்துவத்தில் பயன்படும். இப்பூண்டினால் கண்ணோய், கழலை, உட்புண், கபநோய்கள் ஆகிய இவை போம். மருத்துவ உபயோகங்களாவன; உடலில் தோன்றும் கட்டிகளைக் குணப்படுத்துவதற்கென்றே தனிப்பட்ட சக்தி பெற்ற மூலிகையாக இது இருந்துவருகிறது.

 உடலில் எங்காவது கட்டி தோன்றி இருந்தால் இந்த சிலந்தி நாயகம் இலையைக் கொண்டு சாறு எடுத்து 200 மி.லீ. காய்ச்சிய பசும்பாலில் 1 தே.க. அளவு சாற்றைக் கலந்து கொடுத்து வந்தால் இரத்தத்திலுள்ள கட்டிகளை உற்பத்தி செய்யும் நுண்ணிய கிருமிகளை அழித்து கட்டிகளை ஆற்றிவிடும். அதோடு இந்தச் சாற்றைக் கட்டியின் மேல் கனமாகப் பூசிவர வேண்டும். மருந்தை தினசரி காலை மாலை கட்டி குணமாகும்வரை கொடுத்துவர வேண்டும்.

நீரிழிவு குணமாக சிலந்தி நாயகத்தின் இலைகளைக் கொண்டு வந்து நைத்து சாறு எடுத்து 200 மி.லீ. காய்ச்சிய பசுவின் பாலில் 2 தே.க. அளவு விட்டுக் கலந்து காலை மாலையாக தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

நகச்சுற்றுக்கு இலையை அரைத்து விரற்சுற்றுக்கு கனமாகப் பற்றுப்போட 3 நாட்களில் குணமாகும். விஷம் நீங்க 100 மி.லீ. சிலந்தி நாயகம் என்ற முழுச்செடியின் சாறு குடித்து அதன் திப்பியை கடிவாயில் வைத்துக் கட்ட விஷம் நீங்கும். 

நீரிழிவு நோய்க்கட்டி நீங்க சிலந்தி நாயகம் இலைச்சாறு 1 .தே.க. 25 மி.லீ.பாலும் கலந்து 2 வேளை வெறும் வயிற்றில் சாப்பிட நீரிழிவு நோய்க்கட்டி குணமாகும். இந்தோனேசியாவில் இதன் இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயச் சாறு சம அளவு எடுத்துக் கலக்கி வறட்டு இருமல், தொண்டைவலி, மற்றும் இருதய வலிகளுக்கு உபயோகிக்க குணமடைவதாகக் கூறுவார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இதன் இலை மற்றும் பூவை குடல் புண்ணுக்குப் பயன் படுத்துகிறார்கள். ஆப்பிரிக்காவில் பிரசவ வேதனைக்கும், கழுத்து வலிக்கும் இதைப்பயன் படுத்துகிறார்கள். வேரின் பொடியை வயிற்று வலிக்கும் பாம்புக்கடிக்கும் குணமாக்கப்
பயன்படுத்துகிறார்கள்.

இதன் இலையை நைஜீரியாவில் ஆஸ்த்துமாவிற்குப் பயன்படுத்துகிறார்கள். இலையை நீரின்றி அரைத்து நகச்சுற்றில் கட்டி வர உடைந்து, இரத்தம், சீழ் நோய்கள் யாவும் வெளியேறிக் குணமாகும். இலைச் சாற்றுடன் (1 தேக்கரண்டி) சம அளவு பாலில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரக் கட்டிகள் வராது தடுக்கும். உள் உறுப்புகளில் உள்ள புற்று ரணங்கள் குணமாகும். இரத்த சர்க்கரை குறையும். 

பூ, பிஞ்சு ஆகியவற்றைப் பன்னீரில் போட்டு அத்துடன் 4 அரிசி எடை பொரித்த படிகாரம் கலந்து 4 மணி நேரம் கழித்து தெளிவு இறுத்து 2 துளி ஒரு நாளைக்கு 4 முறை கண்ணில் விடக் கண்கோளாறு, கண்வலி, பார்வை மங்கல், கண்சிவப்பு, கூச்சம் ஆகியவை தீரும். இதன் சாற்றை 60 மி.லி. கொடுத்து இலையை அரைத்து கடிவாயில் கட்டிக் கடும் பத்தியத்தில் இருக்க அனைத்துப் பாம்பு நஞ்சுகளும் தீரும். இதன் மருத்துவ குணம்  உடலுக்கு உடல் மாறுபடும் என்பதால் (மருத்துவரின் ஆலோசனை பெற்று பின்பற்றுங்கள்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of silandhi nayagam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->