கற்பூரவள்ளியின் பயன்கள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


கற்பூரவல்லியை ஆங்கிலத்தில் இந்தியன் போரேஜ் என்று அழைப்பார்கள். இந்த இலைகள் மிகவும் மென்மையாக இருக்கும். இதனை பச்சையாக மென்றால், ஒருவிதமான சுவை மற்றும் புத்துணர்ச்சியை உணரலாம். தென்னிந்திய குடும்பங்களில் பாரம்பரிய மருத்துவ முறையாக இருக்கிறது. 

குழந்தைகளுக்கு மார்பு சளி பிரச்சனை மற்றும் காய்ச்சல் பிரச்சனை சரியாகும். இருமல் பிரச்சனை, பெரியவர்களுக்கு ஏற்படும் நாசி நெரிசல், தொண்டை புண் போன்றவை சரியாகிறது. இதனைப்போன்று ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனை சரியாகிறது. 

வயிறு செரிமானம், உணவின் சுவை, வெப்பமண்டல பகுதிகளில் இருக்கும் ஏடிஸ் கொசுக்கள் கட்டுப்படுத்துதல் போன்றவற்றுக்கும் உதவுகிறது. கற்பூர வள்ளியில் 4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், வைட்டமின் ஏ (34%), கால்சியம் (159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் ஆகிய சத்துக்கள் உள்ளது.

கற்பூரவள்ளி இலைகளை தினம் சாப்பிட்டு வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலை தாக்கும் நோய்களின் எண்ணிக்கையானது குறையும். ஆப்பிளை விட 42 விழுக்காடு ஆன்டி - ஆக்சிடண்டுகள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகளவு உள்ளது. இது நார்சத்தையும் கொண்டுள்ளதால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Karpooravalli Health Tips


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->