குளிர்காலத்தில் இதனை அவசியம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..! - Seithipunal
Seithipunal


குளிர்காலத்தில் ஆஸ்துமா, சளி பிரச்சனைகள் அதிக அளவில் காணப்படும். அதற்கு சிறந்த தீர்வு புதினா. தினமும் புதினாவை துவையல் அல்லது சட்டினியாக செய்து உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.

தேவையானவை:

புதினா - அரை கப்

வெங்காயம் - 2
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
பூண்டு - 4
இஞ்சி - 2 துண்டு
காய்ந்த மிளகாய் - 5
கொத்தமல்லி - 1 கைப்பிடி
தேங்காய் - 1 கப்
புளி - சிறிதளவு
உப்பு - தே.அ
பெருங்காயத்தூள் - 1சிட்டிகை


தாளிக்க :

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு சேருங்கள். பின் காய்ந்த மிளகாய் இஞ்சி , பூண்டு , வெங்காயம் வதக்குங்கள். அதனுடன் புதினா , கொத்தமல்லி, புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். இவற்றை ஆறவைத்து மிக்சியில் அரையுங்கள். மற்றோரு கடாயில் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

புதினாவின் நன்மைகள்

வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகிறது.

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits Mint


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->