தாமரை பூவை உணவில் சேர்த்துக் கொள்வதால் இப்படி ஒரு மகிமையா..?! - Seithipunal
Seithipunal


வெண் தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தேக எரிச்சல் நீங்கும். உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.   

நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும். சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். 

ஞாபக சக்தியைத் தூண்டும்.  மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.  இதய தசைகளை வலுப்படுத்தும்.  இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும். 

தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும். 

வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.  தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.  காது கேளாமை நீங்கும்.  ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். 

தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில்  தடவினால், விக்கல், வாந்தி நிற்கும். உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefit of lotus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->