பாதாமை இப்படி சாப்பிட்டால் உடல் எடை ஈசியாக குறையும்.! - Seithipunal
Seithipunal


உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உலர் பழங்களை சாப்பிடுவது அவசியம். அதில் முக்கியமான இடத்தில் பாதாம் பருப்பு இருக்கிறது. இது உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய அம்சங்களை வழங்குகின்றது. பாதாமை ஊற வைத்து தோல் நீக்கி சாப்பிடுவார்கள். 

சிலர் பாதாம் பருப்பை அப்படியே ஊற வைக்காமல் மென்று சாப்பிடுவார்கள். இரண்டுமே பலனளிக்கும் தான் என்றாலும் ஊறவைத்து சாப்பிடுவது அதிக நன்மை கொடுக்கக்கூடும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி ஊற வைத்த பாதாமை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம். 

மெக்னீசியம், விட்டமின் இ, நார்ச்சத்து, மாங்கனீஸ், புரதம் போன்றவை பாதாமில் இருக்கின்றன. இது அனைத்தும் உடலுக்கு கிடைத்தால் அது நோய் எதிர்ப்பு சக்திகளை நமக்கு கொடுக்கும் பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதுடன் ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். 

இப்படி ஊறவைத்து சாப்பிடும் போது பாதாம் எளிமையாக செரிக்கும். இதில், உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஊற வைத்த பின் அதிகரிக்கும் ஊறவைத்து சாப்பிடும் போது பைட்டிக் அமிலம் வெளியேறிவிடும். ஆனால், ஊற வைக்காமல் சாப்பிடும் போது அந்த பைட்டிக் அமிலம் அதிலேயே இருக்கும். 

பாதாமில் இரும்பு சத்தும் ,துத்தநாகமும் சரியாக உடலில் பயன்படுத்தப்படுவதில்லை. அதை ஊற வைத்து சாப்பிடும் போது அது சரியாக உடலில் வேலை செய்யும். இது வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவும். எனவே உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

badham using for weight loss


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->