மாணவர்கள் கவனத்திற்கு...! கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 25 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு...!
Attention students Applications veterinary medicine courses welcome from May 25th
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://adm.tanuvas.ac.in வழியாக வருகிற 25-ந்தேதி காலை 10 மணி முதல் ஜூன் 17-ந்தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவுசெய்யலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகள், அயல்நாட்டு இந்தியர்களின் நிதி ஆதரவில் பயிலும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான தனிச்சிறப்பு இடஒதுக்கீடு, இணையவழி விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் சேர்க்கை தொடர்பான விரிவான தகவல்கள் அனைத்தும் https://adm.tanuvas.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தகவல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்குழுத் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Attention students Applications veterinary medicine courses welcome from May 25th