அன்புமணியிடம் கெத்துக்காட்டிய ஷபீர் அஹமது யார் தெரியுமா?! கப்சிப் ஆன திமுக, வெளியான பகீர் தகவல்!  - Seithipunal
Seithipunal


நேற்றுமுன்தினம் பாமகவின் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். பாமக அதிமுக கூட்டணியை பற்றி எடுத்துக் கூறிய பின்னர், ஊடகத்தினர் கேள்விக்கனைகளை எதிர்கொண்டார். கேள்விகள் அனைத்துமே, பாமக, அதிமுக கூட்டணி தவறு என அன்புமணியை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இருந்தன. ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, கடுமையான கேள்விகளை, இதுவரை பத்திரிக்கையாளர்கள் கேட்காத அளவில் கடுமை காட்ட, அன்புமணி நிதானமாகவே எதிர்கொண்டார். அவர் பதிலளித்த கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்க ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த அன்புமணி, ஒரு பத்திரிக்கையாளர் பெயரையே குறிப்பிட்டு ஆவேசப்பட்டார். 

இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியது இந்திய முழுவதும் டிவிட்டர் ட்ரெண்ட் ஆன அதே வேளையில் - இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும்  #OneMoreQuestionShabbir எனும் ஹாஷ் டாக் டிரெண்ட் ஆனது.

மருத்துவர் அன்புமணி பத்திரிகையாளர்களை சந்தித்த போது, மிகவும் மோசமாக நடந்துகொண்ட பிரபல தொலைக்காட்சியின் சபீர் அகமதுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் டிவிட்டரில் பல்லாயிரக்கணக்கான கேள்விகளை #OneMoreQuestionShabbir என்கிற தலைப்பில் டிவிட்டரில் கேட்டனர். ஆனால் அவர் அதற்கு பதிலளிக்காமல் தனக்கு ட்விட்டரில் பெருமை சேர்த்தவர்களுக்கு நன்றி கூறினார். 

ஆனால் மறுபுறம் அதே சபீர் அஹமதுவை திமுகவின் உடன்பிறப்புக்கள் கொண்டாடி கொண்டிருந்தனர். அவர் அன்புமணியை கோபப்பட வைத்தார் என்று அவர்கள் பெருமை பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் விமர்சனம் அதிகமாக அதிகமாக பொதுவானவர்களும், இந்த மாதிரியான நெருக்கடியான நேரத்தில் பத்திரிகையாளரை எதிர்கொண்டதே பெரிய விஷயம் தான், மற்ற கட்சி தலைவர்கள் 10 கேள்வி கூட தாக்குபிடித்திருக்கமாட்டார்கள் என அன்புமணிக்கு சாதகமாக பேச தொடங்கிவிட்டார்கள். 

இதற்கிடையே ஒரு சிறு சம்பவத்தை உடன்பிறப்புகளுக்கு ஞாபகப்படுத்த அப்படியே கப்சிப் ஆனார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இதே சபீர் அகமதுவை தாறுமாறாக கேள்வி எழுப்பியதற்காகவும், தகராறை படம் பிடித்ததற்காகவும் திமுக குண்டர்களால் ஓட ஓட விரட்டப்பட்டு உடம்பில், முகத்தில் என பல பஞ்சுகளை வாங்கிக்கொண்டு தப்பித்துக்கொள்ள அறிவாலயத்தின் உள்ளே ஓடி ஒளிந்துகொள்ள, சென்னையின் முன்னாள் மேயராக இருந்த தற்போதைய எம்எல்ஏ, தன்னுடைய வாகனத்தில் ஏற்றி வந்து காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்திலும் பாமகவினர் மிகவும் கன்னியமாகவே நடந்து கொண்டனர். 

ஆனால் அன்புமணி பல முறை பதில் சொல்லிப்பார்த்தும், எச்சரித்த பின்னரும் தான் ஷபீருக்கு பதில் கூற மறுத்தார். ஒருவரை சிறுமைப்படுத்த வேண்டும் என்கிற திட்டமிட்ட நோக்கில் கேள்விகளை முன் வைப்பது பத்திரிகை உலகிற்கு ஆரோக்யமானது அல்ல. அது பத்திரிகை தர்மமும் கிடையாது . இது போன்ற நபர்களை ஆதரிப்பது என்பதும் ஆரோக்கியமான விஷயமல்ல. இது மிக மிக தவறான முன்னுதாரணம். இதே நடைமுறையினை எல்லா அரசியல் தலைவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வைத்தால் பதில் என்னவாக இருக்கும் என சிந்தித்து பாருங்கள். கூட்டணிக்காக அன்புமணி மீது குற்றச்சாட்டு வைக்கலாம் என்பது எந்த அளவு சரியோ, யாரையோ திருப்தி படுத்த ஷபீர் போன்றவர்களின் செயல்பாடுகளையும் விமர்சிக்க வேண்டும் என்பதும் சரியே. அது தான் பத்திரிகை தர்மமும் கூட.. 

இது எல்லாவற்றுக்கும் மேலாக கொசுறு தகவலானது, தனது மாமனாரை எப்படியாவது, அரியணையில் ஏற்றிவிட வேண்டும் என துடிக்கும் மருமகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கும் போதே, கேள்விகளை குறுந்தகவல்களாக அனுப்பி வைத்தாராம். அவருடைய மாமனார் ஐந்து நிமிடம் கேள்விக்கு பதில் சொன்னால் அரசியல் ஜோக்கராகி விடுவார் என்பது அவருக்கு தெரியாதோ என்னவோ! ஏனெனில் அவர் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசமாட்டார் மாறாக அதை மட்டும் தான் பேசுவார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who is shabeer ahamd which one link with dmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->