வேகமாக வளரும் நேரத்தில் பாஜகவுக்கு பெரும் தலைவலி.! முட்டிமோதி நெருக்கும் பூசல்கள்.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கின்றது. இதில், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ்க்கு பாஜக சவால் விடும் என்று அரசியல் கட்சி வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். 

இம்முறை பாஜக மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது. பாஜக மாநிலத்தில் வளர்ந்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்தும் அதிருப்தியாளர்கள் விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்களான முகுல்ராய், சௌமித்ரா கான் ஆகியோர் பாஜகவில் இணைந்து உள்ளனர். இவர்கள் பாஜகவில் ஆதிக்கம் செலுத்த முயற்சிகின்றனர். இது பல்வேறு ஆண்டுகளாக கட்சியில் இருந்து வரும் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. எனவே, மேற்கு வாங்க பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. 

பாஜகவில் சேர்ந்து எம்பிடியான சவுமித்ரா கான் சமீபத்தில் வெளியிட்ட இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல் ரத்து செய்யப்படுவதாக, மாநில தலைவர் திலீப் கோஷ் அறிவித்துவிட எனவே கடுப்பான சவுமித்ரா கான், இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட இது நாளடைவில் புதிய, பழைய நிர்வாகிகள் பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது  பா.ஜ.,வுக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WEST BENGAL BJP ADMIN ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->