திடீரென அரசியலில் குதித்த விமல்.! திட்டமிட்டு போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்.! - Seithipunal
Seithipunal


தமிழக கிராமப்புற கதைகளை மையமாகக் கொண்டே எடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்து கிராமப்புற மக்களிடம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் விமல். இவர் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் கலகலப்பு போன்ற பல திரைப்படங்கள் மிகவும் பிரபலமானது. 

ஊரடங்குகாலகட்டத்தில் தனது சொந்த ஊரான மணப்பாறையில் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி புரிந்தார். இத்தகைய சூழலில், திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட அவருடைய மனைவி அக்ஷயா இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த நிலையில்m தற்போது நடிகர் விமல் திடீரென அரசியலில் குதிக்க காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது, களவாணி, தேசிங்குராஜா போன்ற திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது.

ஆனால், அதன்பின்னர் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர் தோல்வியால், அவருக்கு படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தான் அரசியலில் தலைகாட்டி உள்ளதாக கூறப்படுகிறது. 

விமல் அரசியலுக்கு வரப் போவதை உணர்த்தத்தான் களவாணி-2 திரைப்படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கதை அமைக்கப்பட்டது என்றும், அவர் கொரோனா ஊரடங்கின் போது மணப்பாறை மக்கள் மத்தியில் எப்போதோ பிரச்சாரத்தை துவங்கி விட்டார் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vimal master plan about politics entry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->