விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர்! தந்தையும் மகனும் போட்டுள்ள மெகா பிளான்!  - Seithipunal
Seithipunal


திமுக போட்டியிடும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வின் சார்பாக கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கவுதம சிகாமணி விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். திமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருக்கும் பொன்முடியின் மகன்தான் கவுதம சிகாமணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்பது திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது தான் தெரியவரும். 

நடைபெறவுள்ள 2 தொகுதி இடைத்தேர்தல் ஆனது உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் திமுகவும் அதிமுகவும் இருக்கின்றது. அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல், வேலூர் தொகுதி தேர்தல் ஆகியவற்றில் திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது நடைபெற உள்ள 2 தொகுதி இடைத் தேர்தலிலும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. 

ஒருவேளை தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதிமுக ஆதரவு பெருகி விட்டதாக மக்கள் மத்தியில் பேச்சு தொடங்கும் என்பதால், இந்த தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக தயாராகி வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் குழப்பம் நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அல்லது வேறு யாரையும் நிறுத்த வேண்டுமென்றால் அந்த தொகுதிக்கான மொத்த செலவையும் விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் தானே, ஏற்க வேண்டி வரும். மேலும் கள்ளகுறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மகன் கௌதமசிகாமணி இருப்பதால் விக்கிரவாண்டியின் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலை வரும் என்ற அச்சத்தில் இருக்கிறாராம் பொன்முடி. 

அதனால் செலவுகளை தவிர்ப்பதற்காக, பொன்முடியும் அவரது மகனும் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதன் அடிப்படையில்தான் மற்றவர்கள் போட்டியிட்டால் தானே நாம் செலவு செய்ய வேண்டும், தலைமையிலேயே போட்டியிட்டால் அவர்களே செலவு செய்து கொள்வார்கள், மற்ற மாவட்ட நிர்வாகிகளும் செலவு செய்வார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான், உதயநிதி ஸ்டாலின் பெயரில் இன்று விருப்பமனுவை கொடுத்துள்ளார் கௌதமசிகாமணி. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம் ஆகும். 

தற்போது உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக தேர்தல் களம் கண்டால், கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குவார். அப்போது அவர்களுக்கு அனைத்து செலவுகளையும் தலைமையேற்று செய்யும், அதுமட்டுமல்லாமல் மற்ற மாவட்ட நிர்வாகிகளும் செலவை பகிர்ந்து கொள்வார்கள் என்பதால் தங்களுக்கு செலவு மிச்சம் என்ற எண்ண ஓட்டத்தில் பொன்முடியும் அவரது மகனும் இருக்கிறார்கள். மேலும் அடுத்த தலைமுறை தலைவராக கருதப்படும் உதயநிதியிடம் நெருங்கி வருவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதால்,  தற்போது தலைமையிடம் பொன்முடி நெருங்கி இருப்பது போல பிற்காலத்தில் தலைமையிடம் கௌதமசிகாமணி நெருக்கமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் விருப்ப மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறதாம், விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. தனியாக நின்ற 2016 சட்டமன்ற தேர்தலிலும், கூட்டணியில் நின்ற 2019 மக்களவை தேர்தலிலும் ஏறக்குறைய 40 சதவீத வாக்குகளை வைத்துள்ளது. இதனால் இந்த தொகுதியில் போட்டி என்பது திமுகவிற்கு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தோல்வி அடையும் பட்சத்தில் திமுக தலைமை அதிருப்திக்கு ஆளாக நேரிடும், அதனால் தலைமையே நிற்கட்டும் அப்போது கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்வார்கள் எனபதால் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார்களாம்.. 

போகிற போக்கை பார்த்தால், திருமங்கலம், ஆர்கே நகர் பார்முலா எல்லாம் தவிடுபொடியாகும் என்றே தெரிகிறது.. தீபாவளி நேரத்தில் வாக்களிக்க இருக்கும் விக்கிரவாண்டி நாங்குநேரி மக்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது என இப்போதே சமூக வலைத்தளங்களில் பேச தொடங்கிவிட்டார்கள் ..    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikkiravandi dmk candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->