தேர்ந்தெடுத்த தவறான பாதை.! மண்ணை கவ்விய விசிக.!! சோகத்தில் திருமா.!! வழி தவறிய தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பின் படியும், கள நிலவர படியும், விசிக போட்டியிட்டும் 2 தொகுதிகளிலும் தோல்வியடையும் என்ற நிலைமை அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 17 வது மக்களவை தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்து கடந்த 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடுமுழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதில், தமிழகம், புதுச்சேரி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. இந்த இரண்டு கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சி. விழுப்புரம் மற்றும் சிதம்பரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்தில் திருமாவளவன் வேட்பாளராக களமிறங்குகிறார். விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில்  போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெற்றி பெறுவது அரிதிலும் அரிது என்று கருத்துக் கணிப்புகளும், அந்த தொகுதி மக்களின் மனநிலையும் தெரிவிக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி அனைத்து சமூகத்திற்கும் உண்டான கட்சி என்று திருமாவளவன் கூறி வந்தாலும், விடுதலை சிறுத்தை கட்சி சாதி சார்ந்த கட்சியாக இன்றளவும் அறியப்படுகிறது.

கடந்த காலங்களில் அக்கட்சியின் தொண்டர்கள் இடையே, சாதியை ஒழிப்பதற்காக மாற்று சாதி பெண்களின் பெண்களைத் திருமணம் செய்ய வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது தமிழ்நாடே அறிந்த ஒரு விஷயம். இது சம்மந்தமாக வெளியான காணொளியை திருமா., அது எங்கள் கட்சி தொண்டன் இல்லவே இல்லை என்று ஆணித்தரமாக மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், சரக்கு  இருக்கு, மிடுக்கு இருக்கு என்று மாற்று சாதி ஆண்களை ஆண்மை அற்றவர்கள் என்று அவர் கூறிய காணொளியை ஆதாரமாக வைத்து பாஜகவின் H ராஜா பேட்டியளித்ததற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை. சாதியே இல்லை என்று தமிழகத்தில் யாரும் சொல்ல முடியாது. தற்போதைய மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளின்  வேட்பாளர்கள் பட்டியலே அதற்கு சாட்சி. 

சாதியை ஒழிக்க முற்பட்ட திருமா அவர்கள் மீது நாடக காதல் கட்சி என்ற பெயரே, மக்களின் மனதில் பதியப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றாலே மற்ற சமூக (சாதி) மக்களிடம் ஒரு அருவருப்பை ஏற்படுத்தியுள்ளதை திருமாவே தற்போது உணர்ந்து உள்ளார். விசிக போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் கள நிலவரம் அவருக்கு உண்மையை உணர்த்தியுள்ளது.

சாதியை ஒழிக்க சட்ட ரீதியாகவோ, அல்லது பாராளுமன்றத்தில் ஒரு திட்ட வரவை முன் மொழிந்தோ கொண்டு வந்து இருக்கலாம். ஆனால், அவர் கையில் எடுத்த ஆயுதம் காதல், அது தற்போது நாடக காதல் என்ற நிலைக்கு வந்துவிட்டது. காதல் இரு மனங்கள் சேர்ந்து வரக்கூடியது காதலாக இருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே ஒரு உள்நோக்கத்துடனும், கட்டாயப்படுத்தியும் வருகின்ற இந்த காதலை எப்படி காதல் என்று கூற முடியும்.

தனக்கு ஒரு லாபத்துடன் காதல் செய்வது எப்படி காதல் என்று ஒரு கட்சியின் தலைவர் குறிப்பிடுகிறார். காதலிப்பவர்களுக்கும், காதலைப் பற்றி அறிந்தவர்களுக்கு விளக்கம் கூற வேண்டிய அவசியமில்லை. மற்ற கட்சியினரை சாதி கட்சியினர் என்று கூறும் திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த வன்னி அரசு உள்ளிட்டவர்கள். தாங்கள் தங்கள் சமூகத்தை குறிப்பிடும் போது சாதியாக குறிப்பிடாமல், சமூக அமைப்பு, தாழ்த்தப்பட்ட அமைப்பு என்று குறிப்பிட்டு மற்ற சாதியினர் சமூகத்தினர் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாம் மற்ற சமூகத்தை எந்தளவுக்கு மதிப்பு அளித்து பொதுவெளியில் பேசுகிறமோ.. அதையே தான் மற்ற சமூகமும் பேசும் என்பதை மறந்து, தாழ்த்தப்பட்ட இனம் என்பது சாதியில் உள் அடங்காது என்பது போல கடந்த காலங்களில் பேசி, தற்போது அதனுடைய பிரதிபலனாக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழப்பது உறுதியாகியுள்ளதை அந்த தொகுதி மக்களும் கேள்விகளாக வைக்கின்றனர். 

மேலும், விடுதலை சிறுத்தை கட்சியின் கொள்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதால், அவர்களின் அந்த கட்சியை நம்பி சென்ற இளைஞர்கள் தவறான பாதைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் வெளிப்படையாகவே வைக்கப்படுகிறது. முக்கியமாக விடுதலை சிறுத்தை கட்சி மீது சாதிவெறி பிடித்த ஒரு கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் ஆழமாக பதியப்பட்டுள்ளது. 

இதனை உணர்ந்ததால் தான் தற்போது சமூக வலைதளங்களில் தொல் திருமாவளவன் என்ற பக்கத்தில், வன்னியர் இன மக்கள் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். வன்னியர் வீட்டுப் பெண்கள் எங்களை வீட்டில் அழைத்து உபசரித்தனர். வன்னியர் வன்னியர் வன்னியர் என்று புகழ் பாடிக் கொண்டிருப்பதை வழக்கமாக திருமாவளவன் கொண்டு உள்ளார். மேலும் இந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள செட்டியார் உள்ளிட்ட 6 சாதி அமைப்பு தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார்.

வரும் காலங்களிலாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது அரசியல் லாபத்திற்காக சாதி அரசியல் செய்யாமல் இருந்தால், போட்டியிடும் அணைத்து தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வாய்ப்பிருப்பதாக அந்த தொகுதி மக்களின் கருத்தாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK MAY BE FAIL IN ELECTION


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->