இவர் தான் வலிமை படத்தின் வில்லனாம்! யாரும் இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க!! - Seithipunal
Seithipunal


மிழ் திரைத் துறையில் முன்னணி நடிகராக அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கி, போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எந்த ஒரு புகைப்படமோ அல்லது அப்டேட்டும் வெளியே கசியாமல் மிகவும் பக்காவாக பிளான் போட்டு இந்த படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வினோத்.

ஆனால், அப்படி இருந்தும் சில தகவல்கள் கசிந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நடிகர் அஜித்தின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் வில்லன் யார்? என்பது இதுவரையில் ரசிகர்களுக்கு தெரியாமல் குழப்பத்தில் இருந்துள்ளனர்.

தற்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். தெலுங்கில் வெளியான RX100 என்னும் படத்தின் ஹீரோவாக நடித்த கார்த்திகேயா என்பவர்தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் மாதத்தில் மற்றும் செகண்ட் லுக் அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

valimai movie villan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->