உதயநிதியின் மாஸ்டர் பிளானில் ஈடுபட முயற்சி.. மற்றொரு நடிகரை களமிறக்க நினைத்து, உடைந்துபோன சோகம்.! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தில் திட்டமிட்டு அரசியலில் களமிறக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், திரைப்படங்கள் மூலமாக மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டார். திரைப்படங்களில் நடிக்கும் நேரங்களில் அமைதியாக நடித்துவிட்டு, அரசியலுக்கு வந்ததும் அதற்கு ஏற்றாற்போல தன்னை தகவமைப்பதாக நினைத்து, அரசியலை எள்ளளவும் அறிந்துகொள்ளாத நபரை போல நாகரீகமற்ற முறையிலும் பல விமர்சனம் செய்து வந்தார். 

இந்த நிலையில், மு.க. ஸ்டாலினிற்கு அடுத்து உதயநிதி தான் என்றும், எது வேண்டும் என்றாலும் நேரடியாக தலைமையை சந்திக்காமல், இவர் வழியாகவே தலைமையை சந்திக்க மறைமுக வற்புறுத்தல் அக்கட்சி நபர்களுக்கு வருவதாக துவக்கத்தில் தகவல் வெளியானது. பின்னர் வேறு வழியின்றி அதுவே நடந்தது. 

இவ்வாறாக ஸ்டாலினிற்கு அடுத்து நான் தான் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதால், ரசிகர் மன்றம் அமைத்து அதில் வரும் ஆதரவை பொறுத்து நெருக்கமானவர்களை உதயநிதி பக்கத்தில் வைத்து, பல பொறுப்புகளை அள்ளி வழங்கி வருகிறார். இதன்படி, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழிக்கு அதிகளவு உரிமையை கொடுத்து, திருச்சியை மையமாக வைத்து திறம்பட செயல்பட்டு வந்த கே.என் நேருவை கவனிக்காமல் இருப்பதாக தெரியவருகிறது. 

இதனையடுத்து நேருவின் ஆதரவாளர்கள் பலரும், இனி மகேஷிற்கு தான் மதிப்பு என்று எண்ணி அவரது ஆதரவாளராகவும் மாறிக்கொண்டு வருகின்றனர். இதனால் வெளியே கூற இயலாத வருத்தத்தில் இருந்து வந்த கே.என் நேரு, நடிகர் விமலின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரை கட்சிக்குள் இணைத்து, மீண்டும் தனது பலத்தை நிரூபிக்க முயற்சித்ததாகவும், இதனைக்கேட்ட விமலோ " ஆலை விடுங்க சாமியா " என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார் என்றும் தெரியவருகிறது. 

கே.என் நேருவின் இந்த திட்டம் திடீரென எப்படியோ உதயநிதி தரப்பிற்கு தகவலாக தெரியவரவே, உதயநிதி தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான வருத்தத்தில் செய்வதறியாது அவர் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin Discard KN Nehru


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->