கோவில்பட்டியை டிடிவி தேர்வு செய்தது ஏன்?.. வரவேற்புக்கு கிடைத்து தேர்தலில் எதிரொலிக்குமா?..! - Seithipunal
Seithipunal


கோவில்பட்டி தொகுதியை டிடிவி தினகரன் தேர்வு செய்தது எதனால் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக டிடிவி தினகரன் போட்டியிடவுள்ளார். கோவில்பட்டி நகரம் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய மற்றும் பிரதான நகராக இருந்து வருகிறது. தீப்பெட்டி தொழில் நடைபெறும் பிரதான நகராகவும், கடலைமிட்டாய் நகராகவும் இருக்கிறது. இதனைப்போன்று பட்டாசு மற்றும் ஆயத்த ஆடைகள் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளது.

கடந்த 2016 ஆம் வருடத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றியடைந்த கடம்பூர் ராஜு செய்திகள் மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக மாறினார். இதனால் கோவில்பட்டியில் முதல் அமைச்சராக கடம்பூர் ராஜு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போதைய தேர்தலில் அமமுக தென்மண்டல அமைப்பாளர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் மாணிக்கராஜா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் களமிறங்கினார்.

கடந்த தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், கோவில்பட்டியில் தற்போது களமிறங்கியுள்ளார். கோவில்பட்டி தொகுதியில் 2.75 இலட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், இதில் 23 விழுக்காடு முக்குலத்தோர் சமூகத்தினரும், 20 விழுக்காடு நாயுடு சமூகத்தினரும், 17 விழுக்காடு நாடார் சமூகத்தினரும், 16 விழுக்காடு ஆதி திராவிடம், 6 விழுக்காடு வேளாளர் சமூகத்தினரும் இருக்கின்றனர். 

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் 16 வார்டுகளில் 15 வார்டுகளை அமமுக வெற்றிபெற்று, சேர்மன் பதவியை மணிகராஜா கைப்பற்றினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் 76 ஆயிரம் வாக்குகளை பதிவு செய்து மூன்றாவது இடத்திற்கு வந்தார். கோவில்பட்டி தொகுதியில் அமமுகவிற்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. 

இந்நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னதாக திருநெல்வேலிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இதனால் வியந்துபோன டிடிவி கோவில்பட்டியில் களம்காண திட்டமிட்டுள்ளார். அதிமுகவில் டிடிவி தினகரன் இருக்கும் போதே தன்னை டிடிவி கட்டமைத்துக்கொண்டுள்ளார். இதனையடுத்து டிடிவி கோவில்பட்டி தொகுதியில் களம்காண நினைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், அங்கு அதிமுகவிற்கென வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், அதிமுகவே மீண்டும் வெற்றிவாகை சூடும் என்று அக்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Why Select Kovilpatti Constituency


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->