அண்ணனுக்கு தேர்தலில் சீட் இல்லை! சீனியருக்கு அல்வா கொடுக்க தயாரான ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


விரைவில் அறிவிக்கப்படவுள்ள தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக இருக்கின்றனர். திமுகவில் கோடிகளை தெருகோடிகளில் கொட்டியிறைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவில் சீனியர்கள் சிலருக்கு சீட் மறுக்கப்படும் என கூறப்படுகிறது. அதில் டாப் லிஸ்டில் இருக்கிறார் கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் என்கிறது, விவரம் அறிந்த அறிவாலயம் வட்டாரம்.  

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எங்கிருந்தாலும் தினம் தினம் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து, தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தலில் சீட் வாங்கும் முயற்சியிலும் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். துரைமுருகனை பொதுச் செயலாளர் என்ற முறையில் சந்தித்து பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். வந்தவர்களை எல்லாம் மனம் கோணாமல் பேசி அனுப்பி வைக்கிறார். 

இந்த நிலையில் தேர்தலில் அவருக்கே சீட் இல்லை என்ற தகவலானது வெளியாகியுள்ளது. துரைமுருகன் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவருக்கு அறிவாலயத்தில் மட்டுமே இடம் அளிக்கும் திட்டத்துடன் ஸ்டாலின் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. 

துரைமுருகன் துணை முதல்வர் என கனவில் மிதந்த அனைவருக்கும் தலையில் இடி விழுந்தது போல, இந்த செய்தி இறங்கியுள்ளது. மேலும் வன்னியரான துரைமுருகன் முக்கிய பதவியில் அமர்வதை, கட்சியின் முக்கிய சாதி லாபிக்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகளையே போராடித்தான் துரைமுருகன் பெற்ற நிலையில், தற்போது திரை மறைவில் அவருக்கு எதிராக வேலை நடப்பதாக கூறப்படுகிறது. 

கட்சி பொறுப்புகளை பொறுத்தவரை அவர் சீனியர் என்பதால், அவரையே நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் தேர்தலில் போட்டியிடாமல் செய்துவிட்டால், அவருக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என இந்த திட்டத்தினை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்டாலின், அண்ணனுக்கு அறிவாலயத்தில் இடம் கொடுக்கிறேன் என அல்வா கொடுப்பாரா? இல்லை தேர்தலில் சீட் கொடுப்பாரா? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin plan to avoid duraimurugan in 2021 election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->