கைவிட்டு நழுவும் தேமுதிக., கண்டுகொள்ளாத அதிமுக.! அதிர்ச்சியில் அமித்ஷா., கமுக்கமாக சிரிக்கும் ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அதிமுக, பாஜக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தன. அதிமுகவிற்கு அடுத்து அதிகப்படியான இடங்களில் பாமக போட்டியிட்டது. தேமுதிகவிற்கு மிகவும் குறைந்த அளவிலான தொகுதிகளை ஒதுக்கப்பட்டது. 

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய காரணமே பாஜக தான். பாராளுமன்ற தேர்தலின் போது தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக வழங்கவில்லை. ராஜ்யசபா எம்பிகாக மட்டுமே பாஜகவுடன் திமுக கூட்டணியில் இணைந்ததாக கூறப்பட்டது. ஆனால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி ஆகிவிட்டது. தமிழகத்தில் தேமுதிகவில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. 

பாஜகவின் வாக்குறுதியை நம்பி தேமுதிக நான்கு தொகுதிகளுக்கு சம்மதித்து அதிமுக கூட்டணியில் இணைந்தது. ஆனால், ராஜ்ய சபா பதவி தேமுதிகவுக்கு கொடுக்கவில்லை. மாறாக பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில் ஜிகே வாசனை அதிமுக ராஜ்யசபா எம்பி ஆக்கியது. இதன் காரணமாக தேமுதிகவிற்கு பாஜகவின் மீது மிகுந்த அதிருப்தி ஏற்பட்டது. 

இந்த நிலையில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோருக்கு நேரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தாங்கள் அமித்ஷாவை சந்திக்க விரும்பவில்லை என்று அவர்கள் மறுத்துவிட்டனர்.

அத்துடன் விமான நிலையத்தில் அமித்ஷாவை வரவேற்கவும் பிரேமலதா விற்கு அழைப்பு விடுக்கப்பட்டு தாகவும் அவர் அதனை மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற சந்தேகம் தற்போது மேலோங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகும் பட்சத்தில் திமுகவுடன் கைகோர்க்கும் என்று ஸ்டாலின் குஷியில் இருப்பதாக கூட்டப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin happy with dmdk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->