இதில் கூடவா அரசியல் செய்விங்க? ஸ்டாலினை கடுமையாக எதிர்க்கும் ஊடகவியலாளர்கள்! நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, ஈரோட்டில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை, அதிமுகவினர் தாக்கியதாக செய்திகள் வெளியானது. செய்திகள் வெளியானதை அடுத்து தாக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தார். 

இதனை பத்திரிக்கையாளர்கள் சங்கம், ஊடகவியலாளர்கள் சங்கம் என அனைவரும் வரவேற்றார்கள். இதுபோல ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறைக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை தட்டிக்கேட்க வேண்டும் என ஸ்டாலினின் கண்டனத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். 

அதேசமயம் நீங்கள் இதில் கூட அரசியல் தான் செய்வீர்களா ஸ்டாலின்? என கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார்கள். ஏனெனில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின் பொழுது அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில், அங்கே செய்தி சேகரிக்க சென்ற பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரை விசிக கட்சியினர் கடுமையாக தாக்கினார்கள். அவர் செய்தியாளர் என்று தெரிந்தும், அவரை திட்டமிட்டு தாக்கினார்கள் என்பது விசாரணையில் வெளி வந்தது. 

அதனை அடுத்து தாக்கப்பட்ட செய்தியாளரை, திமுக மாவட்ட செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வந்தார்கள். ஆனால் அப்பொழுது கண்டனம் தெரிவிக்க விரும்பாத ஸ்டாலின் தற்பொழுது கண்டனம் தெரிவித்தது வியப்புக்குரியதாக மட்டும் அல்ல ஆச்சரியமாக உள்ளது. 

அப்பொழுது செய்தியாளர் தாக்கப்பட்டது தன்னுடைய கூட்டணி கட்சிக்காரர்களால் என்பதால் மௌனம் காத்தாரா? என்ற கேள்வியும் தற்போது எழுகிறது. அதேபோல தற்போது செய்தியாளர்கள் தாக்கப்பட்டு இருப்பது அதிமுகவினரால் என்பதால் இவர் கண்டனம் தெரிவிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது. 

ஏன் கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்யச் சென்ற ஸ்டாலின் கண்முன்னே செய்தியாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்பதும் அதிகம் வெளிவராத செய்தி. அப்போதும் அதற்கு அவர் வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகவியலாளர்கள் திமுகவிற்கு சாதகமானவர்கள் என்று மற்ற கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், திமுக தலைவரே, செய்தியாளர்கள் எதிர்க்கட்சிகளினால்  தாக்கப்படும் போது மட்டும் தான் பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுக்கிறார். திமுகவினரால், மற்ற கூட்டணி கட்சியினரால் தாக்கப்பட்டால் மௌனம் காக்கிறார் என பத்திரிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர்கள் என்பவர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஜனநாயகத்தினை காப்பாற்றும் தூண்களில் ஒருவராக போற்றப்படும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படும் பொழுது, யார் தாக்கினாலும் கண்டனம் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.  ஆனால் தன்னுடைய கூட்டணிக் கட்சிகாரர்கள், தன்னுடைய கட்சிக்காரர்கள் செய்தியாளர்களை தாக்கினால் அதற்கு மௌனம் காப்பதும், எதிர்கட்சிக்காரர்கள் பத்திரிகையாளர்களை தாக்கினால் கண்டனம் தெரிவிப்பதும் என இதில் கூட அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் வெட்கக்கேடான ஒன்றாக இருக்கின்றது என பத்திரிகையாளர்களிடையே காரசாரமான விவாதங்கள் சென்றுகொண்டிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin deal with politics in journalist attack issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->