திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் வெடிக்கும் சர்ச்சை.?! கோபத்தில் கொந்தளிக்கும் ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கொலையாலிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்றாவது குரல் கொடுத்துள்ளீர்களா? என்று காட்டமாக எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி இருப்பது ஸ்டாலினை தான் குறிக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகவே திமுகவின் நிலைப்பாடுகளுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு பிரச்சினை இருக்கின்ற நிலையில் இந்த புது பிரச்சனை கூட்டணியில் பிளவு ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலும், இது குறித்து  முடிவெடுக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மிகுந்த மௌனமாக இருக்கின்றார். 

எனவே, ஏழு பேர் விடுதலையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அவரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் கடந்த ஒரு வார காலமாக #ReleasePerarivalan என்பது ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை சட்டரீதியாக விடுதலை செய்ய முடியுமென்றால் விடுதலை செய்யலாம். #ReleasePerarivalan ஆனால் அவர்களை ஹீரோக்களாக ஆக்ககூடாது. அதே வேளையில் ராஜீவ்காந்தி அவர்களுடன் இறந்துபோனவர்களையும் நினைவு கூறவேண்டும்

கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கொலை செய்யப்பட்ட  தர்மன்,சாந்தணிபேகம்,ராஜகுரு,சந்திரா,எட்வர்ட் ஜோசப்,முகமது  இக்பால்,லதா கண்ணன்,டரில் ஜூட்பீட்டர்ஸ்,கோகிலவாணி,முனுசாமி,சரோஜா தேவி,பிரதீப் இவர்களது குடும்பத்தினருக்கும் என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறார்களா?” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin angry about karthi speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->