உதயநிதியால் அசிங்கப்பட்டு நிற்கும் கட்சி! அதிருப்தியில் சீனியர்கள்! நடந்தது என்ன?!  - Seithipunal
Seithipunal


சென்னையின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ கு.க.செல்வம், டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததன் காரணமாக, திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
  
இது குறித்து திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் தெரிவிக்கையில், மறைந்த ஜெ.அன்பழகன் வகித்து வந்த சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று நினைத்தாகவும், ஆனால்  அந்த பதவி கடைசி நேரத்தில் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவுக்கு  வழங்கப்பட்டது. 

இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் கடந்த 2 வாரங்களாக திமுக நிகழ்வுகள் அனைத்தையும் புறக்கணித்து வந்தார். திமுக அலுவலகத்துக்கும் அவர் வரவில்லை. இதனையடுத்து திமுகவினர் யாரும் எதிர்பார்க்காத நிலையில்,  திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களை பார்த்தது திமுகவில் அதிர்வலைகளை உண்டாக்கியது.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்படுவதாக கு.க.செல்வம் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். 

இந்த விவகாரம் குறித்து பேசிய தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்தை மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதற்கு அதிகப்படியான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. 

எம்எல்ஏ ஒருவரை மிட்டாய் காட்டி அழைத்து சென்றதாக பொறுப்பில்லாமல் சொல்வதா? என உதயநிதியின் பேச்சுக்கு திமுக சீனியர்கள் மத்தியில் அதிருப்தி உண்டாகியுள்ளது. ஒரு மிட்டாய்க்கு ஓடுபவரையா சட்டமன்ற உறுப்பினராக அமர வைத்தார்கள் எனவும், அவர் அதிமுகவில் இருந்து வந்தபோதும் மிட்டாய் கொடுத்து தான் திமுக அழைத்து வந்திருக்கும் போல என, இந்த விவகாரத்தில் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மேலும் அண்மையில் பிற கட்சிகளில் இருந்து, திமுகவில் இணைத்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வேதரத்தினம்  போன்றோர்களை திமுகவினரும் மிட்டாய் காட்டி தான் அழைத்து வந்திருப்பார்கள் போல, அப்படி பார்த்தால் திமுகவிடம் மிகப்பெரிய மிட்டாய் கடையே இருக்கும் போல என விமர்சனம் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media reactions to udhaynithi candy shop speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->